செவ்வாய், 27 அக்டோபர், 2020

கொரோனா குறையாத மாவட்டங்கள் பட்டியல்

 சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 253, சேலம் – 165, செங்கல்பட்டு –143, திருவள்ளூர் – 133, காஞ்சிபுரம் – 119, திருப்பூர் – 109, வேலூர் – 49, கடலூர் – 49, விழுப்புரம் – 45, திருநெல்வேலி – 30 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,11,713  ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 45,148 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்துள்ளது.

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில்  தனியார் மருத்துவமனைகளில் 14, அரசு மருத்துவமனைகளில் 18 என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,956 ஆக அதிகரித்துள்ளது.

 

 

நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டின் உயிரிழப்பு வீதம் 1.5% ஆக குறைந்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,014 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,71,489 ஆக  உயர்ந்துள்ளது.  தமிழகத்தில், கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 94.35% குணமடைந்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 29,268 ஆக குறைந்துள்ளது.

தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 59,105 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர் . தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைவோர் வீதமும், 90.23% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில், தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 6,53,717 ஆக உள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 253, சேலம் – 165, செங்கல்பட்டு –143, திருவள்ளூர் – 133, காஞ்சிபுரம் – 119, திருப்பூர் – 109, வேலூர் – 49, கடலூர் – 49, விழுப்புரம் – 45, திருநெல்வேலி – 30 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,96,378 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,856 ஆகும்.