புதன், 7 அக்டோபர், 2020

தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் சேகர் பாபு, சுதர்சனம், ரவிச்சந்திரன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர் ஆகியோர் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்கினர். அக்கடிதத்தில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்திருத்தங்கள் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், எதிர்ப்பலைகளையும் உருவாக்கி உள்ளதால் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தமிழக அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்