செவ்வாய், 13 அக்டோபர், 2020

கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை நிச்சயம்

  தமிழகத்தில் அடுத்த  48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்:

மத்திய மேற்கு மத்திய வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.

இன்று காலை 11.30 மணி அளவில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, விசாகப்பட்டினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 250 கி.மீ-லும், காக்கி நாடா(ஆந்திரப் பிரதேசம்)வுக்கு கிழக்கு- தென்கிழக்கே 290 கி.மீ-லும் மற்றும் நர்சாபூர்(ஆந்திரப் பிரதேசம்)க்கு கிழக்கு தென்கிழக்கே 330 கி.மீ-லும் மையம் கொண்டுள்ளது.

 

 

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வட ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே நிலையாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரையில் காற்று வீசக்கூடும்.

 

 

 

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த  48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும்,  சென்னை, காஞ்சிபுரம், கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: