வியாழன், 15 அக்டோபர், 2020

முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்?

 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ​​சிவானில் ஒரு முஸ்லீம் வாக்காளர், நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு பாஜகவுடன் இணைந்திருப்பது அவர்களுக்கு ஏன் அது ஒரு விஷயமில்லை என்று விளக்கினார். அதற்கான காரணங்களாக, நிதீஷ் குமார் அரசால் வழங்கப்பட்ட பள்ளி சீருடை தனது மகன் இதுவரை வைத்திருந்ததிலேயே சிறந்த உடை என்று அவர் பட்டியலிட்டார். மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் பி டீம் ஆன பாஜகவுடனும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

நிதிஷ்குமார் புகழ்பெற்றவராக இருந்த நேரம் அது. அவர் முதலமைச்சராக தனது முதல் முழு பதவி காலத்தில் மாற்றங்கள் குறித்து வெற்றிகரமனவாராக இருந்த காலமும் அதுதான். அவர் பீகாரின் சோர்வான பகுதியில் நுழைந்து அதன் உச்சத்தில் இருந்தார். அந்தத் தேர்தலில், அவருக்கு கீழே இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 32 இடங்களை வென்றது. அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் 243 இடங்களில் 206 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்.

ஆனால், இது அதே நிதிஷ் அல்ல, அதே என்.டி.ஏவும் அல்ல, பாஜக இப்போது ஐக்கிய ஜனதா தளத்துக்கு சமமான முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் மிக முக்கியமாக, மத்தியில் மோடி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து முஸ்லீம் அந்நியப்படுதலின் அளவு நிதிஷை பாதிக்குமோ என்று அச்சுறுத்துகிறது.

2015 சட்டமன்றத் தேர்தல்களில் கூட, அவரது புகழ் குறைந்திருந்தாலும் நிதிஷ் முஸ்லிம்களின் ஆதரவை (17 சதவீதம்) தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பெரும்பாலான வாக்குகளை மகாகட்பந்தன் கூட்டணி கட்சிகளான ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெற்றது. அவர் 2017-ல் அப்படியே திரும்பி மீண்டும் பாஜகவுக்குச் சென்றது அந்த சமூகத்தின் முதுகில் குத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அப்போது, நிதிஷ் என்.டி.ஏ கூட்டணியில் இருந்தபோது, மோடியின் பாதையில் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளுமையாக நிற்பதை பகிரங்கமாக பொதுவில் காட்டினார். அவர் பீகாரில் கூட்டணியில் முக்கிய பங்கை பிரதமருக்கு வழங்கியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், பீகாரில் 40 இடங்களில் 39 இடங்களை என்டிஏ கைப்பற்றியது. காங்கிரஸ் 70% க்கும் அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட கிஷன்கஞ்ச் தொகுதியை வெல்ல முடிந்தது. அந்த தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் மூன்றாவது இடத்தில் இருந்தது.

ஒரு காலத்தில் அலி அன்வர், டாக்டர் இஜாஸ் அலி மற்றும் டாக்டர் ஷகில் அகமது போன்ற தலைவர்களை அதன் அணிகளில் வைத்திருந்த ஐக்கிய ஜனதா தளத்தில் இப்போது எம்.எல்.சியாகவும் முன்னாள் மாநிலங்களவை எம்.பி. குலாம் ரசூல் பாலியாவியைத் தவிர வேறு எந்த பெரிய முஸ்லிம் தலைவர்களும் இல்லை.

என்.டி.ஏ கூட்டணியில் அக்கட்சி போட்டியிடும் 115 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் நிறைந்துள்ள 10 தொகுதிகளில் ஜே.டி.யு கடந்த 15 ஆண்டுகளில் அந்த சமூக நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்து வருகிறது. அந்த 10 தொகுதிகளும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும்: சிக்தா (ஃபைரோஸ் அகமது குர்ஷித்), ஷியோஹர் (சர்ஃபுத்தின்), அராரியா (ஷகுஃப்தா அஜீம்), தாக்கூர்கஞ்ச் (நௌஷத் ஆலம்), கொச்சதாமன்(முஹமது முஜாஹித்), அமோர் (சபா ஜாஃபர்), தர்பங்கா ரூரல் (ஃபரஸ் ஃபாத்மி), கண்ட்டி (முஹம்மத் ஜமால்), மர்ஹௌரா (அல்தாஃப் ராஜு), மௌவா (ஆஸ்மா பர்பீன்) ஆகும்.

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், “கல்லறைகளுக்கு வேலி அமைப்பதில் இருந்து, தலிமி மார்க்காஜ் (பள்ளிப்படிப்பில் இடையில் நின்றவர்களுக்கான இணைப்பாடம்) தொடங்குவது வரை ஹுனார் மற்றும் அவுசார் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்கள் வரை, நிதிஷ் குமார் அந்த சமூகத்திற்காக நிறைய செய்துள்ளார். ஹஜ் பவன் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையம் ஒரு சிறந்த கல்வி முன் மாதிரியாகும். கோஷங்கள் மட்டும்தான் வேண்டுமா அல்லது சில உறுதியான வேலைகள் வேண்டுமா என்பதை முஸ்லிம் சமூகம் தீர்மானிக்க வேண்டும்.” என்று கூறினார்.

அகில இந்திய பாஸ்மண்டா முஸ்லீம் மெஹாஸ் என்ற அரசியல் சார்பற்ற அமைப்புக்கு தலைமை தாங்கும் முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் அன்வர், தான் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் தான் கட்சியை விட்டு விலகியதாக கூறினார். “இப்போது நிதிஷ் மீது முழு அவநம்பிக்கை உள்ளது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவது முஸ்லிம்களை காயப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஆக்கிரமிப்பு அரசியல் முஸ்லிம்களை ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து மேலும் தூர விலக்கியுள்ளது” என்று அவர் கூறினார். மெஹாஸ் குறைந்தது 2 டஜன் இடங்களில் இருக்கிறது. அங்கே வாக்குகளைப் பாதிக்கக்கூடும் என்று கூறினார்.

பீகாரில் முஸ்லீம் வாக்குகளுக்கு ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கட்சிகள் இப்போதும் பிரதான உரிமைகோரும் இருக்கும்போது, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கிஷன்கஞ்ச், பூர்னியா, அராரியா கத்திஹார், சீமஞ்சல் பகுதிகளில் அவருக்கு உரிய வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிதிஷ் ஆதரவை மேலும் குறைக்கிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் பீகார் இளைஞர் தலைவர் ஆதில் ஹசன் ஆசாத் கூறுகையில், “நாங்கள் சீமஞ்சல் தொகுதியின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எங்கள் கணக்கைத் தொடங்கினோம். நாங்கள் ஒரு நேர்மறையான வாகுகளை விரும்புகிறோம்” என்று கூறினார்.

ஆர்.ஜே.டி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்ஜெய் திவாரி, சிறுபான்மை வாக்குகள் கிராண்ட் கூட்டணிக்கு பின்னால் இருப்பது குறித்து நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். “லாலு பிரசாத்தின் மதச்சார்பற்ற கொள்கை காரணமாக அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். நிதிஷ் குமார் போல, ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு நாங்கள் ஊசலாட மாட்டோம். இந்த ஆதரவு வெற்றி எண்ணிக்கைகளாக மாறக்கூடிய ஒரு விஷயம். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன், எங்களுக்கு வலுவான கூட்டணி உள்ளது. எல்.ஜே.பி அதன் இரட்டை வேடம் போடுவதால் (பாஜகவை ஆதரிப்பது, மற்றும் ஜே.டி.யுவை எதிர்ப்பது), நாங்கள் என்.டி.ஏவின் கணக்கை சீர்குலைப்போம்” என்று கூறினார்.