புதன், 28 அக்டோபர், 2020

கோவையில் போராட்டம் நடத்திய உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் இளைஞரணி நேற்று கோவையில் போராட்டம் நடத்தியது. இதனை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். தற்போது உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பெயர் இல்லாமல் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனை கிழித்தற்காக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில், ஆர்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆர்பாட்டத்தின்போது அத்துமீறி மேடை அமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts: