திங்கள், 19 அக்டோபர், 2020

பீஹார் தேர்தல் ; பிரசாந்த் கிஷோரின் அமைதிக்கு பின்னால் இருக்கும் திட்டம் என்ன?

 பிரஷாந்த் கிஷோர், இந்த நேரத்தில், பின் வரிசையில் இருந்து முன்னாள் வந்திருக்க வேண்டிய நேரம் இது. 2015 தேர்தலுக்கு பிறகு நேரடியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக நிதீஷ் குமாரால் அறிவிக்கப்பட்டார். பிரஷாந்த் கிஷோருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக மாறியது என்று பலராலும் பார்க்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளில், விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டார் கிஷோர். நிதீஷ் உடனான கருத்து வேறுபாட்டிற்கு பிறகு ”பாத் பீஹார் கி” என்ற அரசியல் சார்பற்ற ஃபோரம் ஒன்றை துவங்கினார். களத்தில் இருந்து தலைவர்களை உருவாக்குவதற்கான ஒரு தளமாக இருக்கும் என்றும் அவர் இது குறித்து கூறினார்.

கட்சிகளை டிஜிட்டல் யுகத்திற்கு மாற்றி புகழ் அடைந்த அவர் பீஹார் தேர்தல் குறித்து ஒரு ட்வீட்டும் பதியவில்லை. கடைசியாக கொரோனா வைரஸ் பயம் குறித்து ஜூலை மாதத்தில் ட்வீட் செய்துள்ளார்.  ஆனால் பாட்னாவில் கிஷோரின் நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியாகிய வண்ணம் தான் உள்ளது. ஆர்.எல்.எஸ்.பி. போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். மேலும் எல்.ஜே.பி. தலைவர் சிராக் பஸ்வானின் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் கிஷோரின் பங்கு இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் காண்கிறது. பழைய தலைமுறை சோசியலிஸ்ட்களை உள்ளடக்கிய தலைவர்களின் இறுதி தேர்தல் இது கிஷோர் சிராகிடம் கூறி இருக்கலாம். இது குறித்து எல்.ஜே.பி. செய்தி தொடர்பாளர் பேசிய அஷ்ரஃப் அன்சாரி இது கற்பனையின் உருவம் என்று நிராகரித்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

யார் வெற்றி பெறுவார்கள் என்று அறிந்து அவர்களின் அருகே நிற்பது தான் கிஷோரின் வெற்றியை உறுதி செய்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே பாதாளத்தில் இருக்கும் கட்சிகளை அவரால் மீட்க இயலவில்லை. 2017 உ.பி. தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி வெற்றி பெறாததை போன்று தான். கிஷோரை வெளியேற்றுவது என்பது இந்த சூழலில் மிகவும் விரைவான ஒரு செயலாக இருக்கும். 2025ல் பார்ப்போம் என்றும் பலர் கூறுகின்றனர்.

கிஷோரின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நபர்கள், அப்படி ஒன்றும் கிஷோர் இந்த பீஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. கொரோனா காரணமாக கள வேலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் பாத் பீஹார் கி பக்கங்கள் சமூக வலைதளங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களால் பின்தொடரப்பட்டு வருகிறது.