செவ்வாய், 27 அக்டோபர், 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு ஏன் மிக முக்கியமானது?

 Why US President poll matters to India : இந்தியாவின் இருதரப்பு உறவுகளில் மிகவும் முக்கியமானது அமெரிக்காவுடனான இந்தியாவின் நட்பு. சமீப ஆண்டுகளில் சீனாவுடன் ஏற்பட்ட முரண்கள் காரணமாக இந்த உறவு மேலும் வளர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக எழுதப்பட்டு வந்த தொடரின் இறுதி பாகமாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு எவ்வாறு வளர்ந்தது என்றும் அந்த அதிபர் டெமாக்ரடிக் அல்லது ரிபப்ளிக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ?

அமெரிக்காவுடனான இந்தியாவின் நட்பு என்பது மற்ற நாடுகளின் நட்பைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொருளாதார, மூலோபாய, சமூக மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் இவையாகும். இருதரப்பு உறவுகளுக்கும் உண்மையான வித்தியாசத்தை அமெரிக்க அதிபர்கள் வர்த்தகம் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் மூலமாக கொண்டு வர இயலும்.

எல்லைகளுக்கு வெளியே அரசியல் கருத்தின் மைய நீரோட்டம் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்துகிறது. முன்பொரு காலத்தில் இந்திய மேட்டுக்குடி மக்கள் மத்தியில் நிலவிவந்த ஆண்டு அமெரிக்கனிசம் என்ற நிலை தற்போது பிளவுக்கு முந்தைய காலம் போன்று மாறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் மிகவும் வெற்றிகரமான வெளிநாட்டினர் சமூகங்களில் ஒன்றாக செயல்படுகின்றனர். அவர்களின் அரசியல் விருப்பத்தேர்வுகள் வேறுபடலாம் இருப்பினும் அவர்கள் தங்களின் பிறந்த நாட்டிற்கும் தற்போது வேலை செய்யும் நாட்டிற்கும் இடையே நெருக்கமான பிணைபினையே விரும்புகின்றனர்.

புவி-மூலோபாய கண்ணோட்டத்தில் கடுமையான மாற்றத்திற்கான காரணத்தை விரைவாக சுருக்கமாகக் இங்கே காண்போம். , பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க சாய்விற்கும், வாஷிங்டன்-பெய்ஜிங் நுழைவாயிலின் தொடக்கத்திற்கும் ஒரு பிரதிபலிப்பாக அமைந்தது 1971 இன் இந்தோ-சோவியத் உடன்படிக்கையிலிருந்து இந்தியாவின் விலகல். 2020 ஆம் ஆண்டில், ஒரு சக்திவாய்ந்த, போர்க்குணமிக்க மற்றும் மேலாதிக்கம் கொண்டு பயமுறுத்தும் சீனா இந்தியாவுடனான வாஷிங்டனின் உறவுக்கு உதவியது.

தேர்தல் முடிவுகள் சீனாவுடனான இந்தியாவின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரெம்ப் ஆகிய இருவரும் சீனாவின் அச்சுறுத்தலை உணர்ந்துள்ளனர். அவர்களின் பதில்கள் வேறுபடலாம். ட்ரெம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீனாவிற்கு எதிராக மிகவும் தீவிரமாக செயல்படுவார். ஆனால் containment with engagement என்ற நிலையை பைடன் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் சீன கொள்கை மிகவும் பயனுள்ளதாக அமைய, அமெரிக்காவின் பதிலுடன், வாஷிங்டனின் ஒருக்ங்கிணைப்புடன் நிகழ வேண்டும் என்று நிறைய நபர்கள் கூறுவார்கள். இது ஏற்கனவே மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இது போன்ற சூழலில் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு மூன்று தீர்வுகள் உள்ளது. Hedging; Balancing; or Bandwagoning.

Hedging : இந்தியா சீனாவுடனான பரஸ்பர பகுதிகளில் தொடர்ந்து உறவினை வலுப்படுத்திக் கொண்டே, சீனாவிற்கு எதிராக வலுவான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி பெய்ஜிங்கை லா கார்டே முறையில் எதிர்கொள்ளும். பைடன் அதிபர் ஆனால் இந்த தீர்வையே நாடுவார்.

Bandwagoning : சீனாவுடனான மேலாதிக்கத்தை ஏற்றுகொண்டு அவர்களுடன் கை சேர்வது. இது அமெரிக்காவின் கருத்துக்களை புறக்கணிக்கும். சுயமரியாதை கொண்ட எந்த ஒரு இந்தியனும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

 

பேலன்சிங் என்பது மிகவும் சவாலான அதே நேரத்தில் மோதலுக்கு வழி வகுக்கும் ஒன்றாகும். இதை ட்ரெம்ப் அரசு நிச்சயம் ஏற்கும். இந்தியா சீனாவை பேலன்ஸ் செய்யும் அளவிற்கு இல்லை. எனவே அமெரிக்கா மற்றும் அதே போன்ற ஒத்த எண்ணங்கள் கொண்ட நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுதல் ஆகும்.

பேலன்ஸிங்கிற்கு தேர்வு செய்யப்படும் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு என்ன? குவாட் அமைப்பு அல்லது அல்லது ஆசிய நேட்டோ போன்ற முழு அளவிலான இராணுவக் கூட்டணியா? அத்தகைய ஏற்பாட்டில் இளைய பங்காளியாக இருப்பது இந்தியா வசதியாக இருக்குமா? யுத்தம் மற்றும் சமாதானத்தைப் பற்றிய தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரம் என வரையறுக்கப்பட்ட சுயாட்சி மீதான இந்தியாவின் ஆழ்ந்த நம்பிக்கையை அது எங்கே விட்டுவிடும்? என்பது கேள்விகளாகவே உள்ளது.

வரலாற்று ரீதியாக ஜனநாயக கட்சி அதிபர்களைக் காட்டிலும் இந்தியாவிற்கு ஆதரவாக குடியரசு கட்சி அதிபர்கள் இருக்கிறார்கள். இது உண்மையா?

குறிப்புகள் மற்றும் உள்ளுணர்வைக் காட்டிலும் இந்த விவாதத்தை ஆதரிக்க சில கடினமான உண்மைகளே இருக்கின்றன. ரிபப்ளிக்கன் ஆட்சி அமெரிக்கர்களின் விருப்பங்கள் தொடர்பாக அதிக முடிவுகளை மேற்கொண்டனர். மேலும் குறைவாகவே ஜனநாயகம், அணுபரவல் கட்டுப்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் தலையிடு செய்யும். ஆனால் இந்தியாவுடன் ஆர்வத்தோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிபர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தியாவுடன் மிகவும் நட்பான ரீதியில் இருந்த இரண்டு உலக தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று ஜான் எஃப் கென்னடி. 1960களில் . 2000ம் ஆண்டில் ஜார்ஜ் புஷ். முதலில் கூறியவர் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவர். ஜார்ஜ் புஷ் புதிய கன்செர்வேட்டிவ் ரீபப்ளிக் சித்தாந்தங்களை கொண்டவர். வகைமைப்படுத்த இயலாத அளவில் இரண்டு தலைவர்களும் இந்தியாவுடன் மகிழ்ச்சியாக நட்பு மேற்கொண்டனர். இந்த இரண்டு கால கட்டங்களிலும் சீனாவின் அச்சுறுத்தல், அமெரிக்கா – இந்திய உறவினை வலுசேர்க்க செயலூக்கியாக திகழ்ந்தது.

1960 களில் ஆசியாவில் ஒரு சர்வாதிகார சீனாவுக்கு ஒரு ஜனநாயக எதிர்ப்பாளராக இந்தியாவை நிலைநிறுத்துவதில் கென்னடி எந்த அளவிற்கு ஆதரவளிக்க தயாராக இருந்தார் என்பதை சமீபத்தில் முக்கியமான ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்காக அமெரிக்க அதிபர், தன் நம்பிக்கைக்கு பேர் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஜான் கென்னெத் கால்ப்ரைத்தை தூதராக அனுப்பினார். ஜவஹர்லால் நேரு மற்றும் வெள்ளை மாளிகையை அணுக அவருக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் 1962ம் ஆண்டு ஃபர்ஸ் லேடி, ஜேக்லின் பௌவியர் கென்னடியின் நல்லெண்ண வருகை ஒரு அற்புதமான வெற்றி மட்டுமல்ல. அது நேருவுக்கும் கென்னடி அமைத்து தந்த அறிவார்ந்த மக்களுக்கும் இடையே ஒரு ஆழமான இணைப்பை ஏற்ப்படுத்தியது. (1961ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு நேரு சென்றது ஏமாற்றத்தை அளித்தது).

ஜேக்லீன் இந்தியா வந்த போது டெல்லியில் உள்ள டீன் மூர்த்தியில் உள்ள எட்வினா மவுண்ட்பேட்டனில் தங்க வைக்கப்பட்டார். முன்னாள் சி.ஐ.ஏ. அனலிஸ்ட் ப்ரூஸ் ரெய்டெல் கூற்றுப்படி, நேரு ஜாக்கியால் தன் வாழ்வின் இறுதி வரை பாதிப்பிற்கு ஆளாகினார். அவருடைய புகைப்படத்தை தன்னுடைய படுக்கையறையில் வைத்திருந்தார். (Reidel‘s study JFK’s Forgotten Crisis: Tibet, the CIA, and the Sino-Indian War is easily the best account of those years.)

1959ம் ஆண்டு கென்னடி (செனேட்டராக பணியாற்றிய போது) முக்கியமான வெளியுறவுக் கொள்கை உரையை வழங்கினார். இன்று ஆசியாவின் கவனத்தை ஈர்க்கும் அனைத்தைக் காட்டிலும் நம்முடைய நேரம் மிகவும் முக்கியமானது. கிழக்கு உலகில் தலைமைக்காகவும், ஆசியாவின் மரியாதைக்காகவும் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போராட்டங்கள் நிலவுகிறது. மனிதனின் மரியாதை மற்றும் தனி நபர் சுதந்திரத்திற்கு ஆதரவு தரும் ஜனநாயக இந்தியாவுக்கும் மனித உரிமைகளை மறுக்கும் சிவப்பு சீனாவிற்கும் இடையேயான யுத்தம். சீனாவுடனான இந்தியாவின் போராட்டத்தில் வெற்றி பெற, கென்னடி மார்ஷல் திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தார். நாட்டோ கூட்டணிகள் மற்றும் ஜப்பான் அதற்கு நிதி உதவி வழங்கியது.

கென்னடியின் ஆட்சி காலத்தின் போது, இந்தியா இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பண உதவியை பெற்றது. 1962ம் ஆண்டு போரின் போது கார்டே ப்ளான்ச்சே என்று குறிப்பிடும் வகையில் ராணுவ உதவிகளையும் பெற்றது. சீன-இந்தியப் போரின்போது இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது முன்னணியைத் திறப்பதில் இருந்து பாகிஸ்தானின் ஜனாதிபதி அயூப் கானைத் தடுப்பதில் கென்னடியும் ஒரு முக்கிய பங்காற்றினார். இன்னும் விதிவிலக்காக, கென்னடி நிர்வாகத்திற்குள் மூத்த நபர்கள் இருந்தனர், அவர்கள் அணு ஆயுதங்களை சோதனை செய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் இந்தியா உதவ வேண்டும் என்று விரும்பினர், சீனா அவ்வாறு செய்வதற்கு முன்பு, ஆசியாவில் அதன் நிலைப்பாட்டிற்கு உளவியல் ரீதியான நிரப்புதலை அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. 1963 இல் கென்னடி படுகொலை செய்யப்படாவிட்டால், 1964 இல் நேரு இறந்திருக்கவில்லை என்றால், அமெரிக்க-இந்தியா உறவின் வரலாறு 1960 கள் மற்றும் 1970 களில் வேறுபட்ட போக்கை கொண்டிருக்கும்.

புஷை எடுத்துக் கொள்ளுங்கள், அவரின் எளிமையான பண்பு சான்சி கார்டனர் என்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. சாதுவான தோட்டக்காரர் ஒருவர் அதிபராக மாற்றப்படுவது தான் அந்த கதை. ஆனால் இந்தியா மீதான புஷின் ஆர்வம் புதுடெல்லியுடன் ஒரு மோடஸ் விவேண்டிக்கு வருவதற்கான அவரது விருப்பமும் அமெரிக்க அதிபர்களின் ஆர்வமற்ற தன்மையால் உந்தப்பட்டது. செப்டம்பர் 2008இல் ஜனாதிபதி புஷ் உடனான இறுதி சந்திப்பில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிவசப்பட்டார்.

அதிபர் அலுவலகத்தில், மன்மோகன் சிங் புஷ்ஷிடம், இந்திய மக்கள் உங்களை ஆழமாக நேசிக்கின்றனர். நீங்கள் இரண்டு நாடுகளையும் மிகவும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளீர்கள் இது வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும் என்று கூறினார். உண்மையில், அம்மெரிக்காவிற்கான முன்னாள் தூதர், ஹார்வர்ட் பல்கழகத்தை சேர்ந்த ரோபர்ட் ப்ளாக்வில் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ஆர் என டெல்லியில் இருக்கும் ரூஸ்வெல்ட் ஹைவுஸில் நடைபெற்ற இரவு ரவுண்ட் டேபிள்களில் அடிக்கடி கூறுவார். 2001ம் ஆண்டு டெக்ஸாசில் இருக்கும் ராஞ்சிற்கு வர கூறி புஷ் கூறினார். அப்போது, ”பாப், நினைத்து பாருங்கள். 100 கோடி மக்கள். ஜனநாயக நாடு, 150 மில்லியன் இஸ்லாமியர்கள் ஆனால் அல் கொய்தா இல்லை. வாவ்” என்று கூறியதை இன்னும் நினைவில் கொண்டுள்ளார்.

வெளியுறவுத்துறையில் மறுப்பு தெரிவித்தவர்கள் இருந்த போதிலும் கூட, புஷ் தனிப்பட்ட முறையில் இந்தியாவுடனான அமெரிக்காவின் அணு ஒப்பந்தம் வெற்றியை உறுதி செய்தார். இது இந்தியாவின் அணு திட்டங்களுக்கு மைய நீரோட்டமாக இருந்தது. இந்த ஒப்பந்தம் இந்தியாவையும் அதன் அணுசக்தி திட்டத்தையும் ஒரு மூலையில் அடைப்பதற்காக அல்லாமல். மாறாக சர்வதேச அமைப்பின் நிர்வாகத்தின் உயர் அட்டவணையில் உயரும் சக்தியை வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, இந்தியாவுடனான மிகவும் மோசமாக நட்பினை பாராட்டியது ரீபப்ளிக் கட்சியின் ரிச்சர்ட் நிக்சனும், அதற்கு முன்பு டெமாக்ரட்டிக் கட்சியின் பில் க்ளிண்டனும் தான். நிக்சான் 1970களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சாய்ந்தது அனைவருக்கும் தெரிந்தது. ப்ரின்சடன் கல்வியாளர் கேரி பாஸ் சமீபத்தில் நிக்சன் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் மிகவும் தவறான முன்னெண்ணத்தை கொண்டிருந்தார் என்பதை வெளிப்படையாக கூறினார்.

1990களின் ஆரம்பத்தில் கிளின்டன் ஆட்சியின் போது, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவுகளில் சரிவைக் கண்டன; இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை “முடக்குவது, பின்வாங்குவது மற்றும் அகற்றுவது” மற்றும் காஷ்மீரை காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உதவி செயலாளராக தூண்டப்பட்ட ராபின் ரபேல் (ஒரு FOB – பில் நண்பர்) இருப்பது நிலைமையை மோசமாக்கியது.

அந்த பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு ராபேல் டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் ஆலோசகராக பொறுப்பு வகித்தார். அவர் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் உயர் கமிஷன் உறுப்பினர்களால் ஆகியோரால் மதிக்கப்பட்டார். ஆனால் வெளியுறவுத்துறையாலும், அன்றைய அமெரிக்க விவகாரங்கள் இணைச்செயலாராக பணியாற்றிய அமைச்சர் ஹர்தீப் பூரியாலும் அவமதிப்பிற்கு ஆளானர். தன்னுடைய முதல் நிகழ்வில் ஜம்மு காஷ்மீர் குறித்து அவர் பேசியது இருநாட்டு உறவுகளுக்கும் இடையே ஒரு புதிய தாழ் நிலையை உருவாக்கியது.

அதிர்ஷ்டவசமாக, 1998 அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு, துணைச் செயலாளர் ஸ்ட்ரோப் டால்போட் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இடையேயான உரையாடல் சமநிலையை மீட்டெடுக்க உதவியது, இது படிப்படியாக உறவுகளை மேம்படுத்தியது. மொத்தத்தில், இந்தியாவை ஒரு கூட்டாளராக கருதிய ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்களும் உள்ளனர். பாதகமாக கையாண்ட தலைவர்களும் இருக்கின்றனர்.