புதன், 7 அக்டோபர், 2020

பீகார் தேர்தல்: பஸ்வான் கட்சியின் வியூகம் என்ன?

 ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பீகார் தேர்தலில் தனியாக, ஐக்கிய ஜனதா தளாம் கட்சியை எதிர்த்து போட்டியிட முடிவு மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்தியில் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட என்.டி.ஏவை ஏன் இவர்கள் விரும்புகின்றனர்?

நீண்ட காலமாகவே திட்டம்

பீகார் தேர்தலில் எல்.ஜே.பி. தனித்து போட்டியிட வேண்டும் என்பது மத்திய ஆளும் என்.டி.ஏ கூட்டணியின் நீண்ட நாள் திட்டங்களில் ஒன்றாகும். பீகார் கூட்டணியில் பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தற்போது விளிம்பில் உள்ளது. மூன்று முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை, அவரது அரசியல் வாழ்வில் கடைசி கட்டத்தில் இருப்பதாக பாஜகவினர் காண்கின்றனர். அவர் ஓய்வு பெற்றால், அவரது கட்சியை பாஜகவில் இணைப்பதற்கும், முக்கிய தலைவர்களை ஓரங்கட்டுவதற்கும் பாஜக அழுத்தம் கொடுக்கும். பாஜக ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளத்தை, தேர்தலில் பாதி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ள வைத்துள்ளது. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம் சிறிய கட்சியான HAMமிற்கு தொகுதிகளை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பாஜக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட அதிக இடங்களில் போட்டியிடும். தேர்தல்களுக்குப் பிறகு இது மிகப்பெரிய தனிக்கட்சியாக வெற்றி பெற்றால், அது ஜே.டி.யுவின் சிதைவை துரிதப்படுத்தும்.


சர்வே என்ன கூறுகிறது?

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதீஷ் குமாருக்கு வாக்களிக்க பெரும்பான்மையானோர் சுணக்கம் காட்டி வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. பாஜகவை புறந்தள்ளி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து 2015ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். இருப்பினும் நிதீஷ் பாஜகவின் உறுதியான வாக்கு வங்கியை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சூழலில் , பாஜக பெரிய கூட்டாளியாக வருவது தொண்டர்களை ஊக்கப்படுத்தும். பாஜக தலைவர்கள், பீகார் மாநில பாஜக பொதுச்செயலாளர், உட்பட பலரும் நிதீஷ் குமார் மேலும் 5 ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். சிலர் மட்டும் அடுத்த ஆட்சியின் பாதியில் மாற்றங்கள் கொண்ட வரப்படுதல் நலம் என்று கூறுகின்றனர். எல்.ஜே.பி. தனியாக போட்டியிட்டால், ஆளும் கட்சிக்கு எதிராக கிடைக்கும் வாக்குகளை அவர்கள் பெற முடியும் என்று பாஜக நம்புகின்றது. பெரிய கூட்டணி கட்சியாக பாஜக போட்டியிடுவது என்பது தேர்தலில் நரேந்திர மோடியை மையப்படுத்த உதவும்.

வேலையின்மை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை என இருப்பினும் கூட தற்போதும் மோடியின் அலை ஓயாமல் இருக்கிறது என்று சர்வே அறிவிக்கிறது. பாஜகவின் வியூகம் என்பது அதன் நகர்புற வாக்காளர்களின் எண்ணிக்கையையும், உயர்சாதி வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அப்படியே வைத்திருப்பதும், நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி கிராமப்புற மக்களின் வாக்குகளை அள்ளுவதும் தான். 2015ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு இவை தான் காரனமாக இருந்தது. பிரதமர் மோடி சமீபமாக ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஜே.பிக்கு கிடைக்கும் ஆதாயங்கள் என்ன?

சிராக் பஸ்வான் மற்றும் இதர எல்.ஜ்ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக, நிதீஷ் குமாரை, அவர் ஆட்சியின் நிலைமை குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இது தொடர்பாக ஜே.பி. நட்டாவிடம் பஸ்வான் பேசியதாக தெரிய வருகிறது. இந்த தேர்தல் ஜே.டி.யூவின் ஆட்சிக்கு எதிராக எல்.ஜே.பி.யை பிரிக்க முடியும் மேலும் அது ஒரு எதிர்கட்சி நிலையை எட்ட இயலும். பல மாதங்களுக்கு பிறகு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து எல்.ஜே.பி. வெளியேற உதவியது. ஆனாலும் என்.டி.ஏவுடன் இன்னும் மத்தியில் கூட்டணியில் உள்ளது இக்கட்சி.

ராம்விலாஸ் பஸ்வான் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருக்கும் போது, இங்கு தனித்து போட்டியிடுவது பாஜக மற்றும் மோடியின் உற்சாக பரிசாக பார்க்கப்படுகிறது. மக்களின் பார்வையில் பாஜகவிற்கு ஜெ.டி.யுவைக் காட்டிலும் எல்.ஜே.பியுடனான நட்பு நன்றாக இருப்பதாக தோன்றும். வெறும் இரண்டு தொகுதிகளையும் 5% க்கு கீழ் வாக்கு வங்கியையும் வைத்திருக்கும் ஒரு கட்சி தனித்து போட்டியிட இருப்பதை அறிவிக்க அதிக நேரம் வழங்கியுள்ளது.

எல்.ஜே.பி தற்போது நினைத்த இடங்களில் ஜே.டி.யுவிற்கு எதிராக போட்டியிடலாம். நிதீஷ் இருக்கும் வரையில், எல்.ஜே.பி வளர்ச்சி அடையாது என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். எனவே ஜே.டி.யுவின் வெற்றிக்கான எண்ணிக்கையை குறைத்து, மேலே வர திட்டமிட்டுள்ளது அக்கட்சி. பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது எல்.ஜே.பி. நிறைய தொகுதிகளை வென்றால் கட்சி வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். இல்லையென்றால், எதிர்காலத்திற்கு தேவையான பணியாட்களை சாவடி அளவில் இது உருவாக்கும்.

பெரும்பாலானவர்கள் சிராக் பாஸ்வானை ஒரு லட்சிய அரசியல்வாதியாக பார்க்கிறார்கள். நிதீஷ் மற்றும் லாலுவின் தலைமுறைக்குப் பிறகு, அவர் முதல்வருக்கான போட்டியாளராக எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

எது தவறாக முடியக் கூடும்?

தனித்து போட்டியிடுவது பல்வேறு ஆபத்துகளையும் உள்ளடக்கியது. இது தலித் வாக்குகளை நிச்சயம் பாதிக்கும். இது போன்ற தொகுதிகளில் பாஜக வென்றுவிடலாம். அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து எல்.ஜே.பி. சிறிது வாக்குகளைக் கூட பெற முடியவில்லை எனில் எதிர்கட்சிக்கு அது வாக்குகளை ஒருங்கிணைக்க வழி வகை செய்யும். இது கூட்டணியின் முன்முடிவுகளை கடுமையாக பாதிக்கும். இப்போதைய இந்த முடிவுகள் பாஜக மற்றும் ஜே.டி.யூ பணியாளர்களுக்கு இடையே அவநம்பிக்கையை கொடுக்கும்.