திங்கள், 12 அக்டோபர், 2020

தலித், முஸ்லிம், பழங்குடியினரை பெருமபாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை: ராகுல் காந்தி

 உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ராகுல் காந்தி விமர்சித்தார்.

 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பதிவில், “தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாகவே கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை”.

 

“ஹத்ராஸ் பெண்ணை ஒரு மனிதாராக கருதாததால் தான் அம்மாநில  யாரும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று அம்மாநில முதல்வரும்,  காவல்துறையும், இந்தியர்களும் பலரும் தெரிவித்து வருகின்றனர்” என்றும் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை குறித்து அப்பெண் பலமுறை புகாரளித்தும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஏன் மறுக்கப்படுகிறது என்று கேள்வி கேட்கும் ஊடக செய்தி ஒன்றையும் அவர் சுட்டிக் காட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல்  19 வயது தலித்  இளம்பெண், நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை யோகி ஆதித்யநாத்  கையாண்ட  விதம்  கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் பெண்ணின் உடலை இரவோடு இரவாக காவல்துறை அதிகாரிகள் சிதை மூட்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இருப்பினும், “குடும்பத்தின் அனுமதியோடு தான்” சிதை மூட்டப்பட்டதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மூலம், யோகி ஆதித்யநாத் அரசின் புகழைக் கெடுக்கவும் சாதிய அடிப்படையி கலவரங்களை தூண்டவும் சர்வதேச அளவில் சதி நடைபெறுவதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்தது. ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக தேசத்துரோகம் உட்பட ஐபிசியின் பல கடுமையான பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழ்மை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், தடய அறிவியல்  அறிக்கையை மேற்கோள் காட்டி, பாலியல் பலாத்கார   குற்றச்சாட்டையும் அம்மாநில அரசு மறுத்தது.

இதற்கிடையே, ஹத்ராஸ்-ல் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். ஹத்ராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மூன்று காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக  யோகி ஆதித்யநாத் மேலும் தெரிவித்தார்.

இந்த, வழக்கை சிபிஐ நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.