வியாழன், 8 அக்டோபர், 2020

மேற்கு தொடர்ச்சி மலை சுரங்கப்பாதை: பயன்கள், பாதிப்புகள் என்ன?

 திங்கள் கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன் சுரங்கச்சாலை திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அது கோழிக்கோட்டினை வயநாட்டுடன் இணைக்கிறது. இந்த அறிமுகம் என்பது, கணக்கெடுப்பு, விரிவான திட்ட அறிக்கைக்கு முன்பான இறுதி சீரமைப்பு, தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் இருந்து அனுமதி பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சர்வே 3 மாதங்களில் நிறைவேறிவிடும் என்றும், அடுத்த மார்ச் மாதத்தில் வேலைகள் துவங்கி 34 மாதங்களில் முடிவு பெறும் என்றும் விஜயன் கூறியுள்ளார்.

இந்த கோழிக்கோடு-வயநாடு சுரங்கப்பாதை சாலை எது?

நாட்டின் மூன்றாவது மிக நீளமான 7 கி.மீ சுரங்கப்பாதையாக கூறப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான காடுகள் மற்றும் மலைகள் வழியாக 8 கி.மீ நீளம் கொண்டது. அதன் இணைப்பு புள்ளிகள் கோழிக்கோட்டில் இருக்கும் திருவாம்படி கிராம பஞ்சாயத்தில் உள்ள மரிபுழா மற்றும் வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள கல்லடி ஆகும். தற்போது, வயநாடு பீடபூமி கேரளாவின் மற்ற பகுதிகளுடன் நான்கு சாலைகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் மலைப்பாங்கான பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நீளமானது கோழிக்கோடு – மைசூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 766-ல் உள்ள 13 கி.மீ தாமரசேரி காட் சாலையாகும்.

தாமரசேரி சாலையில் ஏற்படும் பயண நெருக்கங்களை தவிர்க்கவும், மழைகாலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வெகுநாட்களாக மாற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொடரந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டப்பட்ட கோரிக்கை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இரண்டு மாற்று பாதைகள் இதற்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. கோழிக்கோடு மற்றும் வயநாட்டின் இரண்டு வேறு பகுதிகளை அவை இணைத்தது. ஆனால் இந்த சாலைகளுக்கான பரிந்துரை, காடுகளை அழிக்க நேரிடும் என்ற காரணத்தால் அடுத்து முன்னேறவில்லை.

இந்த சுரங்கப்பாதை திட்டம் எப்படி உருவானது?

1970களிலேயே, தற்போது பரிந்துரைக்கப்பட்ட மார்க்கத்தின் மீது சாலைகள் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் வன நிலமும் இதில் அடங்கியிருந்ததால் இந்த திட்டம் நிறைவேறவில்லை. 2015ம் ஆண்டில், முந்தைய ஆட்சி தனியார் ஏஜென்சி மூலம் சர்வேக்கு உத்தரவிடப்பட்டது. மரிப்புழா மற்றும் கல்லடி இடையேயான வன வழியான பாதையை ஆய்வு செய்ய இது அமைக்கப்பட்டது. ஆனால் மலையின் மீது சாலைகள் அமைப்பது மிகவும் கடினமான ஒன்று என ஏஜென்சி முடிவு செய்தது. அதனால் ஆரம்பம் மற்றும் இறுதி புள்ளிகளில் தனியார் நிலங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை பரிந்துரை செய்தது.

To read this article in English

தற்போதைய அரசாங்கம் 2016 ல் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த திட்டத்திற்கு ஒரு உந்துதல் கிடைத்தது. டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் ஆதரவுக்காக மெட்ரோ முன்னோடி இ.ஸ்ரீதரனை அணுகியபோது, கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் (கே.ஆர்.சி) அணுகுமாறு பரிந்துரைத்தார். 2019 ஆம் ஆண்டில், ஒரு ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் கணக்கெடுப்பு, டிபிஆர் மற்றும் திட்ட செயலாக்கத்திற்கான சிறப்பு நோக்க வாகனமாக எடுத்துக் கொண்டது. அரசாங்கம் இந்த திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளித்ததுடன், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடம் (KIIFB) ரூ .658 கோடியை அளிப்பதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உறுதி அளித்தது.

இந்த சாலை சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கும்?

தற்போது பரிந்துரைக்கபப்ட்ட சாலை பசுமை மாறாக்காடுகள், அரை பசுமை மாறாக்காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் சோலைகளை உள்ளடக்கியது. நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளில் பரவியிருக்கும் யானை வழித்தடத்தையும் உள்ளடக்கியது. கர்நாடகாவை நோக்கி பாயும் சாலியாறு மற்றும் கபினி இந்த பகுதியில் உற்பத்தியாகிறது, சாலியாறின் துணையாறான எருவழஞ்சிபுழாவும் இந்த மலையில் தான் துவங்குகிறது. பருவ காலத்தில் பெரும் மழை பெய்யும் இடங்களாக அறியப்பட்ட இந்த பகுதிகளில், 2019ம் ஆண்டு காவலப்புறாவில் உட்பட, பல்வேறு நிலச்சரிவுகளை கண்டது.

எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இது ஒரு சவாலை எதிர்கொள்ளாது?

இந்த திட்டத்தின் ஆதரவாளர்கள் சுரங்கப்பாதை காடுகளை (மரங்களை) அழிக்க மாட்டார்கள் என்று கூறி வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி வனச் சட்டம் மேற்பரப்பு பகுதிக்கு மட்டுமல்ல, மரங்களுக்கு அடியில் உள்ள முழு நிலத்தடி பகுதிக்கும் பொருந்தும். சுரங்கப்பாதை திட்டங்களுக்கு, நிலத்தடி சுரங்கங்கள் தொடர்பான நிபந்தனைகள் பொருந்தும். முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை 7 கி.மீ நீளமாக இருப்பதால், இதற்கு அவசர வெளியேறும் இடங்கள் மற்றும் காற்றோட்டம் கிணறுகள் வசதிகள் ஆகியவை தேவைப்படும். இது காடுகளை மேலும் பாதிக்கும் என்று கூறி வருகின்றனர்.

உண்மையாக அழிக்கப்பட்டது என்ன?

அடுத்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு, ஆய்வு அறிக்கை, டிபிஆர் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி என அனைத்தும் நிலுவையில் இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அரசு. சுரங்கப்பாதையின் ஆரம்பம் மற்றும் முடியும் இடங்கள் திருவம்பாடி மற்றும் கல்பெட்டா தொகுதிகளில் உள்ளது. இரண்டும் சி.பி.ஐ (எம்) ஆதரவாளர்களை அதிகம் கொண்ட தொகுதிகளாகும். வந்த்துறையினர் இன்னும் கே.ஆர்.சியிடம் இருந்து, சர்வே நடத்த விண்ணப்பங்கள் வர வில்லை என்று கூறியுள்ளது.