வெள்ளி, 16 அக்டோபர், 2020

மக்களவையும் மாநிலங்களவையும் விவாதங்களுக்கான இடங்கள் என்பது முடக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலாட் மற்றும் விஹாங் ஜும்லே எழுதியுள்ளனர்.

 தி இந்தியன் எக்ஸ்பிரஸில் பாரிஸின் சி.இ.ஆர்.ஐ – சயின்சஸ் பிஓ/ சி.என்.ஆர்.எஸ் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலாட், கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் விஹாங் ஜும்லே ஆகியோர் கூட்டாக, கருத்து கட்டுரை ஒன்றை மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தை தவிர்ப்பது பற்றி பதிவு எழுதினார்கள்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில், சராசரியாக ஆண்டுக்கு 3.6 முறை பேசியுள்ளார்: ஆறு ஆண்டுகளில் 22 முறை (இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த எச்.டி.தேவேகவுடாவை விட அதிகம் இல்லை) பேசியுள்ளார். இதற்கு நேர்மாறாக, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஆறு ஆண்டுகளில் 77 முறை பேசினார். மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவியில் நாடாளுமன்றத்தில் 48 முறை பேசியுள்ளார்.

இந்த புள்ளிவிவரத் தகவல்கள், பிரதமர் மோடி, வானொலியில் (1970களில் இந்திரா காந்தி போல) அல்லது சமூக ஊடகங்கள் வழியாக (அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போல) மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பும் மோடியின் பிரபலமான பாணியை விளக்குகின்றன.

இந்த இரண்டு கட்டுரை ஆசிரியர்களின் கருத்துப்படி, இந்த 2 முறைகளும் பொதுவான ஒரு கருத்தைக் கொண்டுள்ளன. அவை ஒரு வழிச் செய்தியைத் தெரிவிக்கும் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன. இது கருத்து முரண்பாட்டு அபாயத்தையும் செய்தி பெறுபவர் கேள்வி கேட்பதையும் தவிர்க்கிறது.

வரையறையின்படி, நாடாளுமன்றம் விமர்சனம், கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றை உருவாக்குதல் முக்கியமானதாகும். நாடாளுமன்றம் மக்கள் திரள் துருவங்களைத் தவிர்த்து நிற்கிறது. ஏனெனில் அது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை எடுத்துக்காட்டுகிறது (ஒரு தலைவரின் அவருடைய மக்களுடன் நேரடி தொடர்புக்கு மாறாக). ஆனால் அது எதிர்க்கட்சியினரை விமர்சகர்களாக கருதுகிறது. எதிரிகளாக அல்ல.

நாடாளுமன்றத்தைத் தவிர்ப்பதற்காக, மோடி அரசாங்கம் பெரும்பாலும் அவசரச் சட்ட வழியைப் பின்பற்றி வருகிறது. அவசரச் சட்டங்கள் பொதுவாக சிறுபான்மை அரசாங்கங்கள் அல்லது கூட்டணி அரசாங்கங்களால் செய்யப்படுகின்றன. இருப்பினும், மக்களவையில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும், மோடி அரசாங்கம் தனது முந்தைய அரசுகளைவிட அதிகமாக அவசரச் சட்டத்தை பயன்படுத்தியது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கீழ் ஆண்டுக்கு 6 அவசரச்சட்டங்களையும் மோடி அரசாங்கத்தின் ஆண்டுக்கு 11 அவசரச் சட்டங்களாகவும் உயர்ந்துள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை விவாதாங்களுக்கான இடங்களாக இருப்பது நித்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

முதலாவதாக, நாடாளுமன்றக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை நாடாளுமன்றப் பணிகளின் திட்டமிட்ட மையத்துக்கு அனுப்பப்படுவது பெரிய அளவில் சுருங்கிவிட்டது. 15வது மக்களவையில் 68-ல் (மொத்தத்தில் 71 சதவீதம்) இருந்து 16 வது மக்களவையில் 24 ஆகவும் (மொத்தத்தில் 25 சதவீதம்) 2020 இல் பூஜ்ஜியம் ஆகவும் சுருங்கி உள்ளது.

இரண்டாவதாக, இந்த வகைக்கு பொருந்தவில்லை என்றாலும், பல முக்கிய சட்டங்கள் நிதி மசோதாக்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

மூன்றாவதாக, சாதாரண மசோதாக்கள் அதிகம் விவாதிக்கப்படவில்லை, அவற்றின் பிரதிகள் எம்.பி.க்களிடம் கடைசி நிமிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாலும் அல்லது விவாதங்களுக்கு சிறிது நேரம் இருப்பதால் அதிகம் விவாதிக்கப்படவில்லை.

“நாடாளுமன்றத்தின் வீழ்ச்சி எல்லோராலும் பார்க்கப்படுகிறது? ஆனால், யாராவது கவலைப்படுகிறார்களா? ” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.