ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சூரப்பா அரசு விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது - அமைச்சர் கே.பி.அன்பழகன்

 அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசு விதிகளுக்கு உட்படாமல்  செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என  உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வின் 49 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி  தருமபுரி அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு கிடைக்காது. அதே போல் வட மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்  அதிக அளவில் சேர்ந்து விடுவார்கள்.  இதனால்  சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.  இதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டிருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts: