சனி, 24 அக்டோபர், 2020

"ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது" - சி.பி.எஸ்.இ.

 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது என்றும் அதுபோல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் CBSE தெரிவித்துள்ளது.

 

CBSE பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் போன்றவற்றில் பணியில் சேருவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ( CTET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். CTET தேர்வை ஒவ்வோர் ஆண்டும் CBSE நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான CTET தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், CTET தேர்வுக்கான தேதியை CBSE வெளியிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

 

ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்துள்ள CBSE நிர்வாகம், அது போலியானது என்றும் அதுபோல் எந்த தேதியையும் வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. சூழல் சரியான உடன், CTET தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு CTET இணையதளத்தை தொடர்ந்து கவனிக்குமாறும் CBSE தெரிவித்துள்ளது.