வியாழன், 23 டிசம்பர், 2021

ஆதார் இணைப்பு முடிந்தது; பொது வாக்காளர் பட்டியல் திட்டத்தை கொண்டு வர முனைகிறதா அரசு?

 21 12 2021 

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பொது வாக்காளர் பட்டியலை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆதார் அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021 நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு . நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான பொதுவான வாக்காளர் பட்டியலின் நிலை குறித்த கூட்டத்தை நடத்தியது. இந்த கமிட்டியின் தலைவராக பாஜகவின் சுஷில்குமார் மோடி உள்ளார்.

குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான திரிணாமுலின் சுகேந்து சேகர் ராய், காங்கிரஸின் தீபேந்தர் ஹூடா, திமுகவின் பி வில்சன் ஆகியோர் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதம் நடத்தியதோடு, மாநில அதிகாரங்களில் அத்துமீறும் செயல் இது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசியல் சாசனத்தின் கீழ் மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வாதிட்டதாக தெரியவந்துள்ளது.

பொது வாக்காளர் பட்டியலின் நிலை குறித்த விளக்கத்தை, சட்டப் பேரவைத் துறைச் செயலர் ரீட்டா வசிஷ்டா மற்றும் தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள் குழுவிடம் அளித்தனர். பொது வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாநில தேர்தல் ஆணையர்களுடன் விரைவில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு கமிட்டியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

சட்டத்தை திருத்துவதற்கு ஆதரவாக அரசு இல்லை. ஆனால், பொதுவான வாக்காளர் பட்டியலை ஏற்றுக் கொள்ள மாநிலங்களை வலியுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 17 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோர், நவம்பர் 16 அன்று பிரதமர் அலுவலகத்தால் அழைக்கப்பட்ட ஆன்லைன் உரையாடலில் கலந்து கொண்டதாக செய்தி வெளியிட்டது. பொதுவாக்காளர் பட்டியல் குறித்து ஒந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்தது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமை தாங்கும் கூட்டத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற சட்ட அமைச்சகத்திடம் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு வழக்கத்திற்கு மாறாக கடிதம் வந்து ஒரு நாள் கழித்து இந்த கூட்டம் நடைபெற்றது.

2002 ஆம் ஆண்டு முதல் நீதிபதி எம் என் வெங்கடாசலையா தலைமையிலான அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் பஞ்சாயத்து ராஜ், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பொதுவாக்காளர் பட்டியலை தயார் செய்ய பரிந்துரை செய்த போதில் இருந்து விவாதத்தில் இருக்கிறது இந்த பொது வாக்காளர் பட்டியல் விவகாரம்.

இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம், 2007 ஆம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகம் குறித்த ஆறாவது அறிக்கையில், மாநில தேர்தல் கமிஷன்களின் பெயர்களை திருத்தம் செய்யாமல், உள்ளாட்சிக்கான சட்டமன்ற வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளாட்சி சட்டங்கள் வழங்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை முன்வைத்தது. இந்திய சட்ட ஆணையம் 2015 ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தம் குறித்த 255வது அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவான நிலையை வெளியிட்டது.

source https://tamil.indianexpress.com/india/aadhaar-linking-done-common-electoral-roll-next-386578/