28 12 2021 AAP scored big in Chandigarh municipal polls : யாரும் எதிர்பார்த்திராத வெற்றி இது. சண்டிகர் போன்ற ஒரு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நகரில், எப்போதும் பாஜகவும் காங்கிரஸுமே ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு நகரில் ஆம் ஆத்மி அநேக இடங்களில் நகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று திங்கள் கிழமை அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.
ஆம் ஆத்மி 14 இடங்களில் வெற்றி பெற, இரண்டாம் இடத்தை பிடித்த பாஜக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் அகலி தளம் ஒரே இடத்திலும் வெற்றி பெற்றது. சண்டிகரில் ஆம் ஆத்மி வெற்ற பெற காரணமாக இருந்த ஐந்து விசயங்கள் என்ன என்பதை ஆய்வு செய்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
AAP’s Delhi model of governance
ஆம் ஆத்மி டெல்லியை ஆட்சி செய்யும் முறை சண்டிகரில் அக்கட்சிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. நகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் இக்கட்சி வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த ஆண்டில் 200 மடங்காக உயர்த்தப்பட்ட குடிநீர் வரி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி இந்த முறை தேர்தலில் மக்களுக்கு 20 ஆயிரம் லிட்டர் நீர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
ஆளும் கட்சிக்கு எதிரான போக்கு
மோடி அலையின் காரணமாக 2016ம் ஆண்டு பாஜக அனைத்து நகராட்சி இடங்களிலும் வெற்றி பெற்றது. 26 வார்டுகளில் 21 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது (அதன் கூட்டணி கட்சியான ஷிரோமணி அகலி தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது). அதனால் பாஜக மேயர்கள் ஆட்சிக்கு வந்தனர்.
குப்பைகளை அகற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் வரி, சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டது. இது சண்டிகர் வார்டுகளில் பாஜகவிற்கு எதிரான கடுமையான போக்கு அதிகரித்தது. குறிப்பாக காலனி பகுதிகளில், அடிப்படை வசதிகளை பெற அதிக செலவு செய்ய வேண்டியதால், குடியிருப்போர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
அதிக அளவு திறந்த வெளிகளுக்கு பெயர் போன சண்டிகரில் கடந்த சில காலங்களாக வாகன நிறுத்தத்திற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இடப்பற்றாக்குறை அதிகரித்த காரணத்தால் பார்க்கிங் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. இவை அனைத்தும் பாஜகவிற்கு எதிரான மனப்போக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது.
சுத்தமற்ற சண்டிகர்
நீர், மின்சாரம் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றிற்கு அதிக வரி செலுத்தி அதிருப்தியுற்ற மக்கள், தங்கள் நகரின் தூய்மையை பாஜக முற்றிலுமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2016ம் ஆண்டு சண்டிகர் இந்தியாவில் தூய்மையான நகரங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. தற்போது 66வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அங்கே வசிக்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
குப்பை அள்ளும் பிரச்னையை ஆளுங்கட்சியினர் முறையாக கையாளவில்லை. குப்பைகளை அகற்றுவதற்கோ அல்லது பதப்படுத்துவதற்கோ முறையான வழிமுறைகள் இல்லாததால், தாதுமஜ்ராவ பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சண்டிகர் எப்போதும் தூய்மையான நகரங்களில் ஒன்றாக பெருமை அடைந்தது. ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பு இல்லாமல் போனது மக்களை வருத்தத்திற்கு ஆளாக்கியது.
மோடி அலையையே மீண்டும் பயன்படுத்திய பாஜக; மக்கள் பிரச்சனையை கருத்தில் கொண்ட ஆம் ஆத்மி
தேர்தலுக்கு முன்னாள் பாஜக வேட்பாளர்கள் மோடி அலையை பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் இடம் பெற்றிருந்த புதிய வேட்பாளர்கள் உள்ளூர் பிரச்சனைகளை கையில் எடுத்தனர். இது அங்குள்ள மக்களுடன் எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆட்சிக்கு வந்தால் மாற்றங்கள் நடக்கும் என்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மக்களிடம் கூறியுள்ளனர்.
குடிநீர் விநியோகம், கல்வி, திடக்கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அனைத்து விவகாரங்கள் குறித்து தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டனர் ஆம் ஆத்மி கட்சியினர்,
ஜெய் ஸ்ரீ ராம், இந்துத்துவ கொள்கைகளை வைத்து பாஜகவினர் வாக்காளர்கள் மத்தியில் மோடி அலையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக நரேந்திர மோடி தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர் பாஜகவினர்.
பாஜகவின் பிம்பத்தை தகர்த்த கொரோனா இரண்டாம் தொற்று
கொரோனா இரண்டாம் அலை பாஜகவின் பிம்பத்தை தகர்த்தது. மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேவையான படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் போன்றவை கொரோனா இரண்டாம் அலையின் போது கிடைக்கவில்லை என்று மக்கள் நினைக்கின்றனர்.
மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருந்த போது ஆளும் கட்சியின் கவுன்சிலரை கூட அணுக இயலாத சூழல் நிலவியது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பெரிய உதவிகள் அந்த நேரத்தில் கிடைக்கவில்லை. மாறாக தண்ணீர் வரி மட்டுமே அப்போது உயர்த்தப்பட்டது.
source https://tamil.indianexpress.com/explained/5-reasons-why-aap-scored-big-in-chandigarh-municipal-polls-388996/