சனி, 18 டிசம்பர், 2021

வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!

 17 12 2021 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்’ ஒமிக்ரான் புதிய மாறுபாடு இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகுதான் விமான நிலையங்களை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால், வெளிமாநிலங்களிலிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து விமானத்தில் தமிழகம் வரும் பயணிகளுக்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இ-பதிவு செய்திருப்பது கட்டாயம்.

72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

தெர்மல் ஸ்கேன் பரிசோதனை

அத்துடன் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளை பொறுத்தவரையில், மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/e-pass-registration-is-mandatory-for-travelers-who-coming-to-tamil-nadu-by-air-from-other-states-384585/