சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மாமூல் வசூல் ஆகியவற்றை தடுப்பதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப் படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதே போல, தொழில் நிறுவனங்களை சில கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகள் தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகள் மற்ற்றும் மாமூல் வசூல் ஆகியவற்றை தடுப்பதற்காக, கூடுதல் எஸ்.பி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப்படை அமைத்துள்ளது. அதே போல, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொந்தரவு அளிக்கும் நபர்களைக் கண்காணிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றிவருகிறார். இவருடைய தலைமையில் சென்னை புறநகர் பகுதி ரவுடிகளை ஒடுக்கும் சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரவுடிகள், தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து புள்ளிகளை ஒடுக்கவே என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை களமிறக்கப்பட்டுள்ளார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/encounter-specialist-adsp-velladurai-appointed-to-prevent-kattapanchayat-in-chennai-390532/