செவ்வாய், 21 டிசம்பர், 2021

உங்களின் பான் கார்டு ஒரிஜினலா போலியா? கண்டுபிடிக்க ஈஸி வழி!

 20 12 2021 வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது.10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய முக்கிய ஆவணமான பான் கார்டை, போலியான விநியோகித்து பண மோசடியில் சம்பவங்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

எனவே, இதனை தடுக்கும் நோக்கில் ஜூலை 2018க்கு பிறகு விநியோகிக்கப்பட்ட அனைத்து பான் கார்டுகளிலும் Enhanced Quick Response (QR) code பதிக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் உள்ள QR code மூலமாக அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடியும். நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு ஒருவேளை போலியானதா இருக்கலாம். அதனை ஆன்லைன் மூலம் கண்டறியும் ஈஸி வழியை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

பான் கார்டு போலியானதா? – கண்டறியும் வழிமுறை

  • முதலில் பிளே ஸ்டாரில் ‘PAN QR Code Reader’செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • இந்த வார்த்தையை போட்டு தேடுகையில் பல செயலிகள் ஒரே பெயரில் வரலாம். ‘NSDL e-Governance Infrastructure Limited’ஆல் தயாரிக்கப்பட்ட செயலியா என்பதை பார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின்னர் செயலி ஓப்பன் செய்தவுடன் பச்சை நிற பிளஸ் குறியீட்டுடன் கேமரா ஓப்பன் ஆகும்.
  • கேமராவில் உங்களுடைய பான் கார்டை காட்டி, அதிலுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • QR code நன்கு தெரியும் வகையில் பான் கார்டை வைத்திட வேண்டும்.
  • ஸ்கேன் ஆனவுடன் பான் கார்டு தொடர்பான விவரங்கள் திரையில் தோன்றும்
  • பான் கார்டில் உள்ள விவரங்களும் மொபைல் ஆப்பில் வந்த விவரங்களும் சரியாகப் இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.

விவரங்கள் பொருந்தினால் உங்களுடைய பான் கார்டு ஒரிஜினல்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை தகவல்கள் வேறுபட்டு இருந்தால், உடனடியாக வருமான வரித் துறை இணையதளம் போன்றவை மூலம் புதிய பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/business/steps-to-find-out-if-a-pan-card-is-fake-or-not-385553/