செவ்வாய், 21 டிசம்பர், 2021

தோட்டம் அமைக்க -அரசு தரும் மானியம்

 

தோட்டக்கலை

தோட்டக்கலை துறையானது பழங்கள், காய்கறிகள், சுவை தாளிய பயிர்கள் மற்றும் மலைப்பயிர்கள் போன்ற பயிர்வகைகளின் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விவரிப்பதாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி, வாழை, பலா, எலுமிச்சை, கொய்யா, மரவள்ளி, கத்தரி, வெண்டை, மிளகாள், கீரை, கொடிவகைகள், மஞ்சள், செண்டிப்பூ, மல்லிகை, சம்பங்கி போன்ற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி 15019 எக்டர் பரப்பளவில் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலனுக்காக

  • இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்பது முதன்மையான நோக்கம்.
  • அதிக பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவித்தல்.
  • உயர் தொழில்நுட்பங்களை கையாள செய்தல்.
  • பண்ணையினை இயந்திரமயமாக்குதல்.
  • வீரிய ஒட்டுவகை காய்கறி மற்றும் நடவு பொருளை பயன்படுத்த செய்தல்.
  • அடர் நடவு முறையினை கையாள செய்தல்.
  • உயர் விளைச்சல் தரக்கூடிய, அதிக வருவாயுடன் கூடிய பயிரினை பசுமைக்குடிலில் வளர்க்க செய்தல்.
  • அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசன முறையை கையாள செய்தல்.
  • தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கையினை ஊக்குவித்து விளைச்சலை அதிகரிக்க செய்தல்.
  • ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை.
  • ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி நிர்வாகம்.
  • உயர் தொழில்நுட்பங்களை கையாளச்செய்தல்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேலாண்மை இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH)

  • மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பகிர்தலின் கீழ் இயங்கி வருகிறது.
  • அனைத்து விவசாயிகளும் 4 எக்டர் வரை இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  • வீரிய ஒட்டு காய்கறி பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு மானிய விலையில் குழிதட்டு காய்கறி நாற்றுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
  • அடர் நடவு முறையில் மா ஒட்டுச்செடிகள் நடவு செய்ய மானிய விலையில் செடிகள் வழங்கப்படுகிறது.
  • பூக்கள் மற்றம் சுவை தாளியங்கள் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு மானிய விலையில் குழிதட்டு முறையில் உற்பத்தி செய்த பூக்கள் மற்றும் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
  • உயர் விளைச்சல் தரக்கூடிய காய்கறி வகைகளை பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை குடில்களில் வளர்த்திட பசுமைக்குடிலுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.
  • மல்சிங் (மூடாக்கு) -குடன் கூடிய சொட்டுநீர் பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்ய 50% மானியம் வழங்கப்படுகிறது.
  • பவர்டில்லர், மினிடிராக்டர் பெற்றிட மானியம் வழங்கப்படுகிறது.
  • அறுவடைக்கு பின்பு மேலாண்மை இனத்தின் கீழ் குளிர்பதன கிடங்கு அமைத்தல், சிப்பம் கட்டும் அறை, பழுக்க வைக்கும் அறை கட்டுதல் போன்ற இனங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

 

2. பிரதான் மந்திரி விவசாய சொட்டுநீர் பாசனத்திட்டம் (PMKSY)

  • மத்திய மற்றும் மாநில அரசு நிதி பகிர்தலை கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்.
  • அனைத்து வகையான தோட்டக்கலை பயிர்களுக்கும் மானிய உதவி வழங்கப்படுகிறது.
  • இதர வகையினருக்கு 75% மானிய உதவியில் அதிகபட்சமாக 5 எக்டர் வரை பெறலாம்.
  • சிறு விவசாயிகளுக்கு 100% மானிய உதவியில் அதிகபட்சமாக 2 எக்டர் வரை பெறலாம்.
  • குறு விவசாயிகள் 100% மானிய உதவியில் அதிகபட்சமாக 2 எக்டர் வரை பெறலாம்.
  • சொட்டுநீர் பாசனம் / தெளிப்புநீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் பயன்கள்

  • தண்ணீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது. 40-60% தண்ணீர் சிக்கனப்படுத்தப்படுகிறது.
  • உரம் வழங்கும் கருவி மூலம் உரம் இடுவதால் உரம் வீணாகாமல் 80% உரம் பயிருக்கு கிடைக்கின்றது.
  • களை கட்டுபடுத்தப்படுகிறது.
  • குறைந்த தண்ணீரில் அதிக அளவு பரப்பு பயிர் செய்யலாம்.
  • தரமான விளை பொருட்கள் பெறலாம்.
  • அதிக விளைச்சல் பெறலாம்.
  • மின் சேமிப்பு பெறலாம்.

3. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

  • நிதி மத்திய மற்றும் மாநில அரசின் பகிர்தல் மூலம் பெறப்படுகிறது.
  • பழமரங்கள் பரப்பு விரிவாக்கம் செய்திட பழச்செடிகள் 40மூ மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • வெங்காய சாகுபடி செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.
  • சுற்றுசூழலுக்கு உகந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.
  • புறநகர் பகுதிகளில் காய்கறி உற்பத்தி செய்ய மானிய விலையில் விதை பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
  • கொடிவகை காய்கறிகளின் சாகுபடி பரப்பினை அதிகரித்திட பந்தல் மற்றும் டிரெல்லிஸ் அமைத்திட 50% மானியம் வழங்கப்படுகிறது.

4. மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டம்

  • அனைத்து விவசாயிகளும் 2 எக்டர் வரை மானியம் பெற்று பயனடையலாம்.
  • ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் தோட்டங்கள் அமைத்திட 50% மானிய உதவி வழங்கப்படுகிறது.
  • இயற்கை முறையில் மண்புழு உரம் தயாரித்திட மண்புழு உரக்கூடாரம் மற்றும் மண்புழு. உரப்படுக்கை 50% மானிய உதவி வழங்கப்படுகிறது.

5. பயிர் காப்பீடு – பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)

  • அதிகளவு மழை அல்லது மழையின்மையின் காரணமாக பயிர்கள் மற்றும் மகசூல் பாதிக்கும் நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
  • இழப்பீடு பெறுவதற்கு விவசாயிகள் அரசு குறிப்பிடும் காலக்கெடுவிற்குள் பிரிமியம் தொகை கட்ட வேண்டும்.
  • கூட்டுறவு வங்கி / தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் பயிர்க்கடன் பெறுவோர் மற்றம் கடன் பெறாதவர்களும் இத்திட்டத்தின் பயன் பெறலாம்.
  • பயிர் காப்பீடு வாழை, மரவள்ளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.

6. அரசு தோட்டக்கலை பண்ணைகள்

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று அரசு தோட்டக்கலை பண்ணைகள் உள்ளன.
  • அரசு தோட்டக்கலை பண்ணை, குடுமியான்மலை – அன்னவாசல் வட்டாரம்.
  • அரசு தோட்டக்கலை பண்ணை, வல்லத்திராக்கோட்டை – திருவரங்குளம் வட்டாரம்.
  • அரசு தோட்டக்கலை பண்ணை, நாட்டுமங்கலம் – அறந்தாங்கி வட்டாரம்.
  • மூன்று அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் நல்ல தரமான பழச்செடிகள், அலங்கார செடிகள், குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பண்ணைகளுக்கு வருகை தரும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 

நிர்வாகம்

மாவட்ட தலைமை மற்றும் நிர்வாக அதிகாரி

தோட்டக்கலை துணை இயக்குநர்,
புதுக்கோட்டை.

வட்டார அளவிலான தலைமை அதிகாரி

அனைத்து திட்டங்களும், செயலாக்குவது,தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்து செல்வது.

வட்டார அளவிலான அதிகாரி

பயனாளிகள் தேர்வு திட்டப்பணிகள் செய்வது வயல்வெளி பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது போன்ற பணிகள்.

களப்பணியாளர்கள்

அனைத்து திட்டப் பணிகளுக்கும் பயனாளிகள் தேர்வு செய்வது, திட்டப்பணிகள் செய்வது மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வது.

தொடர்பு

அலுவலர்இடம்அலைபேசி
துணை இயக்குனர் தோட்டகலைபுதுக்கோட்டை மாவட்டம்9787433599
உதவி இயக்குனர் தோட்டகலை (PM)புதுக்கோட்டை7094382390
உதவி இயக்குனர் தோட்டகலைபுதுக்கோட்டை8122442218
உதவி இயக்குனர் தோட்டகலைகுன்னண்டார்கோவில்6383635071
உதவி இயக்குனர் தோட்டகலைகந்தர்வக்கோட்டை9843917074
உதவி இயக்குனர் தோட்டகலைதிருவரங்குளம்9585473220
உதவி இயக்குனர் தோட்டகலைகறம்பக்குடி8778223346
உதவி இயக்குனர் தோட்டகலைஅறந்தாங்கி9688841018
உதவி இயக்குனர் தோட்டகலைவிராலிமலை7904223804
உதவி இயக்குனர் தோட்டகலைபொன்னமராவதி9578770294
உதவி இயக்குனர் தோட்டகலைஅன்னவாசல்9786882155
உதவி இயக்குனர் தோட்டகலைதிருமயம்9994659469
உதவி இயக்குனர் தோட்டகலைஅரிமளம்9600016824
உதவி இயக்குனர் தோட்டகலைஆவுடையார்கோயில்9688841018
உதவி இயக்குனர் தோட்டகலைமணமேல்குடி9688841018

https://www.tnhorticulture.tn.gov.in/
https://pudukkottai.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/