சனி, 18 டிசம்பர், 2021

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

 17 12 2021 AIADMK to protest against Dmk Tamil News: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-to-protest-against-dmk-tamil-news-admk-minister-jayakumar-sings-song-at-the-protest-site-384637/