19 12 2021 சிங்கப்பூர் அரசு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடைவிதித்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்ட 400 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்கள் தெற்காசியாவில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூரில் தமிழர்கள் அமைச்சர்களாகவும் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தமிழர்களை வரவேற்கவே செய்கிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி, திருவாரூரைச் சேர்ந்த குமார் (25) என்பவருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை வாழ்நாள் தடை விதித்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், அவர் இனிமேல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமாருக்கு ஏன் சிங்கப்பூர் அரசு ஏன் வாழ்நாள் தடை விதித்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டதாகவும் அதனால், சிங்கப்பூர் அரசு அவருக்கு வாழ்நாள் தடைவிதித்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
சிங்கப்பூர் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமார், அங்கே நாம் தழிழர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் அரசு, அவருக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், நாம் தமிழர் கட்சி சார்ந்து செயல்பட்டவர்கள் சுமார் 400 பேர் இதுவரை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் அரசு சமீப காலமாக அந்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை முடக்கி வருகிறது. மேலும், அங்கே நாம் தமிழர் கட்சி கூட்டங்களுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றும் நாம் தமிழர் கட்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் அரசு நாம் தமிழர் கட்சிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், நாம் தமிழர் கட்சியின் மீதான சிங்கப்பூர் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை நாம் தமிழர் கட்சியினர் பகிரங்கமாக பயன்படுத்தி வருவதும் பிரபாகாரனை புகழ்ந்து பிரசாரங்கள் மேற்கொள்வதுதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/singapore-govt-order-lifetime-ban-to-naam-tamilar-katchi-cadre-to-entering-singapore-385223/