செவ்வாய், 21 டிசம்பர், 2021

பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு ஆஜராக ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

 பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அவரை எப்போது ஆஜராக கூறப்பட்டுள்ளது, என்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியான தகவல்வெளியாகவில்லை.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஐசிஐஜே 2016 பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தப்பட்ட பல முக்கிய நபர்களில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர். இந்த நடவடிக்கை 2005 இல் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அமிக் பார்ட்னர்ஸ் லிமிடெட் என்ற ஆஃப்ஷோர் நிறுவனத்தை நடத்திய பச்சன் குடும்பத்திற்கு எதிரான வழக்கை ஏஜேன்சி தீவிரமாக விசாரிப்பதை காட்டுகிறது.

மூத்த அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ” இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரினார். மூன்றாவது சம்மனுக்கு ஆஜராகுவாறா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகாவின் என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணத்தின்படி, பச்சன் குடும்பம் அங்கு நடத்தி வந்த அமிக் பார்ட்னர் நிறுவனத்தின் இயக்குநர்களாக ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று ஆண்டுகள் இருந்துள்ளனர்.

அந்த ஆவணத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ராய், அவரது தந்தை கோட்டேடி ரமணா ராய் கிருஷ்ணா ராய், தாயார் விருந்தா கிருஷ்ண ராஜ் ராய் மற்றும் சகோதரர் ஆதித்யா ராய் ஆகியோர் மே 14, 2005 அன்று அமிக் பார்ட்னர்களின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பங்கும் $1க்கு இணையான மதிப்பை கொண்டுள்ளது. நான்கு இயக்குநர்களும் ஒரே மாதிரியான 12,500 பங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஜூன் 18, 2005 அன்று, அமிக் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராய், அதன் பங்குதாரராக மாற்றப்பட்டார். தொடர்ந்து, ஜூலை 5, 2005 இல் நிறுவன பங்குதாளர் ஒருவர் பரிந்துரைபேரில், ரகசியத்தன்மையின் காரணங்களுக்காக, Ashwaria Rai என்ற பெயரை A Rai என மாற்றியுள்ளனர்.

பின்னர், 2008 இல், அபிஷேக் பச்சனை ராய் மணந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, நிறுவனத்தை மூடுவதற்கான பிராசஸ் தொடங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன.

இதுகுறித்து அச்சமயத்தில் பேசிய ஐஸ்வர்யா ராயின் ஊடக ஆலோசகர் அர்ச்சனா சதானந்த், இந்த ஐசிஐஜே கூட்டமைப்பு என்றால் என்ன? என்ன பணி செய்கிறது? இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா, அவர்கள் பெறும் தகவல் உண்மையானது என்பதை நாம் அறிவது எப்படி. வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.

2016இல் பனாமா பேப்ர்ஸ் பணமோசடி தகவல் வெளியான முதல், அவ்வழக்கை ED விசாரித்து வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிப்போட்படி, பனாமா பேப்பர்ஸ் விசாரணை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளால் ரூ.20,000 கோடி மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

source https://tamil.indianexpress.com/india/aishwarya-rai-bachchan-summoned-by-ed-in-panama-papers-case-385576/