புதன், 29 டிசம்பர், 2021

ஜன.,3 முதல் நேரடி விசாரணையை தொடங்கும் உயர் நீதிமன்றம்

 

ஜன.,3 முதல் நேரடி விசாரணையை தொடங்கும் உயர் நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு மார்ச் இறுதி முதல் நேரடி விசாரணை நடைமுறை நிறுத்தப்பட்டு, ஆன்லைனில் வழக்குகள் விசாரிக்கும் முறை அமலுக்கு வந்தது.

பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை காணொலி மற்றும் நேரடி என இரண்டு முறையிலும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல் ஆன்லைன் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. வழக்குகள் வழக்கமான முறையில் நேரடியாக விசாரிக்கப்படும்

வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள் உயர் நீதிமன்றத்திற்குள் அனைத்து வாசல்களிலும் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நுழைவு வாசலில் உள்ள பாதுகாப்பு மற்றும் கோவிட் நெறிமுறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதே நேரம், வழக்கிற்கு நிச்சயம் ஆஜராக வேண்டும் என்கிற மனுதாரரும், சாட்சி சொல்பவரை தவிர வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் நீதிமன்றத்திற்கு நேரில் வர விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீன்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். கொரோனா விதிமுறையை கேன்டீன்களில் கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-to-only-have-physical-hearings-from-jan-3-389549/