27 12 2021 EC meets Health Secretary to review Covid-19 situation ahead of Assembly polls in 5 states: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிகம் பரவக்கூடிய தொற்றுநோயான ஓமிக்ரான் மாறுபாட்டை கருத்தில் கொண்டு, கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்ய, தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் திங்களன்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனை சந்தித்தனர்.
கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமரை வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
செவ்வாய்கிழமை மதியம் லக்னோவிற்கு தேர்தல் ஆயத்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஆணைய அதிகாரிகள் சென்று 30 ஆம் தேதி பிற்பகல் திரும்புவார்கள்” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய சராசரிக்கும் குறைவான அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலைமை காரணமாக, சுகாதார அமைச்சகம் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பலதரப்பட்ட குழுக்களை அனுப்பியுள்ளது. அடுத்த 3 முதல் 5 நாட்களுக்கு மாநிலங்களில் அந்த குழுக்கள், நிலைமையை மதிப்பிட்டு, தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைத்து, தினமும் மாலை 7 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களின் நிலைமையை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த பிறகு தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.
சுகாதாரச் செயலாளர் டிசம்பர் 23 அன்று, தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் “அதிவேகமாக தடுப்பூசிகளை அதிகரிக்கவும்”, குறிப்பாக “குறைந்த தடுப்பூசி கவரேஜ் உள்ள மாவட்டங்களில்” பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் உத்தரவிட்டார்.
அனைத்து மாநிலங்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் போது, குறைந்த தடுப்பூசி கவரேஜ் கொண்ட பகுதிகள் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும், இந்த பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கடந்த வாரம் உத்தரகாண்ட் பயணத்தின் போது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரிக்கை குறித்து கேட்டபோது, உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை ஒரு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறினார். மேலும், தேர்தல்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார், அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் படி ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
கடந்த வெள்ளியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமரை “வலுவான நடவடிக்கைகளை எடுக்க” வலியுறுத்தியது மற்றும் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் தேர்தல்களை “நிறுத்துவது மற்றும் ஒத்திவைப்பது” பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
தேர்தல் ஆணையம் தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் அங்கு செல்வது வழக்கம். தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் ஏற்கனவே தேர்தல் நடைபெறும் பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு, அடுத்ததாக உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல உள்ளனர்.
கோவாவிற்கு தனது மறுஆய்வுப் பயணத்தின் போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மற்றொரு அலையின் அச்சுறுத்தலை மீறி, கோவாவில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார் (மற்றும் மற்ற மாநிலங்களும் ஒரே நேரத்தில் தேர்தலுக்குச் செல்கின்றன), ஆனால் பிரச்சாரத்தின் போது கோவிட் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்குப்பதிவும் நடைபெறும் என்றும் வலியுறுத்தினார். கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் தற்போதைய சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் 2022 இல் முடிவடைகிறது, அதே நேரத்தில் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.
source https://tamil.indianexpress.com/india/election-commission-covid-19-assembly-election-388965/