சனி, 4 டிசம்பர், 2021

‘Omicron’ – இதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியுமா?

 புதிய கொரோனா மாறுபாடு தற்போது அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது. கிரேக்க எழுத்துகளில் 15வது எழுத்தான ஒமிக்ரானை இந்த மாறுபாட்டிற்கு பெயராக சூட்டப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு குறித்து அதிக அளவில் இன்னும் தகவல்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலையில் இதனை எப்படி உச்சரிப்பது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.


ஆங்கிலத்தில் இதற்கான சரியான உச்சரிப்பு ஏதும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மெரியம் வெப்ஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு உச்சரிப்பான “ஓஹ்-முஹ்-க்ரான்”-இல் (“OH-muh-kraan”) முதல் மாத்திரை அழுத்தி உச்சரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றும் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் சமீபத்தில் இந்த மாறுபாடு கவலைக்குரியது என்று அறிவிக்கும் போது இந்த உச்சரிப்பை பயன்படுத்தினார்.

அமெரிக்காவில் இது அஹ்-முஹ்-க்ரான் (AH-muh-kraan) என்று அதிகம் உச்சரிக்கப்படுவதாக மெரியம் வெப்ஸ்டர் கூறுகிறது. ஓ-மி-க்ரான் என்பது மிகவும் குறைவாகவே உச்சரிக்கப்படுகின்ற நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆரத்தில் ஒஹ்-மை-க்ரான் (OH-my-kraan) என்று குறிப்பிட்டார்.

தி நியூ யார்க் டைம்ஸின் போட்காஸ்ட்டான தி டெய்லியில் அபூர்வா மந்தவில்லி இந்த மாறுபாட்டை அஹ்-முஹ்-க்ரான் என்று அழைக்க இருப்பதாக கூறினார். ஆனாலும், இப்போது அது அவ்வளவு முக்கியமானதாக படவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு மொழியியல் பேராசிரியரான டாக்டர் ஆண்ட்ரியாஸ் வில்லியின் கூற்றுப்படி, புதிய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி மெரியம்-வெப்ஸ்டரில் இருந்து வேறுபட்ட உச்சரிப்பை வழங்குகிறது. அதாவது, ‘o-MIKE-ron’ என்ற ஆங்கில சொற்றொடர் போல அது வழங்குகிறது என்று கூறினார்.

கிரேக்க மொழியில் இந்த ஒ மைக்ரான் என்பது சிறிய ஓ என்று பொருளாகும். கிரேக்க செம்மொழியில் இரண்டாவது மாத்திரை ஆங்கிலத்தில் “Me” என்ற உச்சரிப்பை கொண்டதாகும் என்றும் வில்லி குறிப்பிட்டார்.


மெரியம் வெப்ஸ்டரின் மூத்த ஆசிரியரான பீட்டர் சொகோலோவ்ஸ்கி கிரேக்க வார்த்தையானது ஆங்கிலத்தில் உச்சரிப்பிற்காக ஒலிபெயர்க்கப்பட்டதால் omnipotent என்ற வார்த்தை லத்தீனின் omni-potent-என்ற தோற்றத்தில் இருந்து வேறுபட்டது. “AH-muh-kraan” என்ற உச்சரிப்பும் சரியானதாக இருக்கிறது. இது ஒன்றும் தவறான பதில் இல்லை என்றும் அவர் கூறினார்.

முதல் எழுத்தின் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உச்சரிப்பு பற்றிய கேள்வி உண்மையில் இந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு கிடையாது. “God” என்பதன் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உச்சரிப்புகளை ஒப்பிட்டு பாருங்கள் என்று வில்லி கூறுகிறார்.

இந்தப் பெயர் கடன் சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு இடங்களில் ஆங்கிலம் பேசுபவர்களால் வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் வேறுபாடுகள் உருவாகின என வில்லி கூறினார்.

நாம் ஆங்கிலத்தில் பாரீஸ் பற்றி பேசும் போது ஃப்ரெஞ்ச் வார்த்தையில் உச்சரிக்கும் சரியான பதத்தை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்டிப்பான அர்த்தத்தில் அது தவறு இல்லை என்றும் வில்லி குறிப்பிட்டார்.

Written by Christine Hauser

source https://tamil.indianexpress.com/explained/how-do-you-say-omicron-377956/