31 8 2022
தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக ஆட்சேர்ப்பு நடைமுறைகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை.
ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter)
காலியிடங்களின் எண்ணிக்கை: 29
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருகெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,200 – 1,14,800
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு சுருக்கெழுத்து திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2022
இந்த அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-police-department-recruitment-2022-for-29-junior-reporter-posts-502962/