செவ்வாய், 13 செப்டம்பர், 2022

இன்னும் 145 நாள்கள்தான்.. படிப்படியாக முன்னேறுகிறோம்.. காக்கி அரை டவுசருக்கு நெருப்பூட்டிய காங்கிரஸ்..!

 

இன்னும் 145 நாள்கள்தான்.. படிப்படியாக முன்னேறுகிறோம்.. காக்கி அரை டவுசருக்கு நெருப்பூட்டிய காங்கிரஸ்..!
அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை யாத்திரை) நடைபயணம் மேற்கொண்டுவரும் நிலையில் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தது.

அந்தப் புகைப்படத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் முன்னாள் சீருடையான அரை காக்கி டவுசர் (அரை காக்கிச் சட்டை) தீப்பற்றி எரிவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. “வெறுப்பில் இருந்து விடுபடுவதற்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கேடுகளை திரும்ப பெறுவதற்கும் காலம் நெருங்கி விட்டது. படிப்படியாக முன்னேறுகிறோம். இன்னும் 145 நாள்கள்தான்” எனக் கூறப்பட்டிருந்தது.


இதற்கிடையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “ வெறுப்பு, மதவெறி மற்றும் தவறான எண்ணங்களை மக்களிடம் விதைப்பவர்கள், அவற்றை திரும்ப பெற காலம் வரும் என்பதையும் உணர வேண்டும்.

source https://tamil.indianexpress.com/india/congress-puts-up-image-of-khaki-shorts-on-fire-rss-bjp-say-instigating-violence-509232/