மூன்று மாத கீழ்நோக்கிய போக்கில் இருந்து வெளியேறி, நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்திலிருந்து ஆகஸ்டில் 7.00 சதவீதமாக அதிகரித்துள்ளது. கூடுதலாக, இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) மூலம் அளவிடப்படுகிறது, ஜூலை மாதத்தில் 2.4 சதவீத வளர்ச்சியைக் கண்டது, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட இரண்டு தனித்தனி தரவுகள் திங்களன்று வெளியிடப்பட்டது.
கடந்த மாதம் 7.00 சதவீத உயர்வுடன், CPI தொடர்ந்து எட்டாவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உச்ச வரம்பு 6 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து இருந்து வருகிறது. மார்ச் 2026 இல் முடிவடையும் ஐந்தாண்டு காலத்திற்கு, சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதமாகவும், அதிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ என்ற அளவில் வைத்திருக்க ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.
பொருளாதார வல்லுனர்களின் சமீபத்திய ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு ஆகஸ்ட் மாதத்தில் CPI 6.90 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
CPI முதன்மையாக ரிசர்வ் வங்கியால், அதன் இருமாத நாணயக் கொள்கையைத் தயாரிக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கடந்த மாதம் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தி 5.40 சதவீதமாக அறிவித்தது. பொங்கி வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் MPC இந்த நிதியாண்டில் இதுவரை முக்கிய வட்டி விகிதத்தை 140 bps உயர்த்தியுள்ளது. இருப்பினும், அவர்களின் நகர்வு இருந்தபோதிலும், சில்லறை பணவீக்கம் மேல் சகிப்புத்தன்மைக்கு மேல் தொடர்ந்து உள்ளது. பணவீக்கத்தை சமாளிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த மாத இறுதியில் MPC கூட்டம் நடைபெற உள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) அல்லது உணவுக் கூடையின் பணவீக்கம் மாத மாதம் அதிகரித்து வரும் போக்கில், ஜூலை மாதத்தில் 6.69 சதவீதத்திலிருந்து 7.62 சதவீதமாக ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் விலை 13.23 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர, மசாலாப் பொருட்கள் 14.90 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தானியங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் 9.57 சதவிகிதம் மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் 6.39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. முட்டை விலை (-)4.57 சதவீதம் சரிந்தது, ஆனால் பழங்கள் விலை 7.39 சதவீதம் உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் பானங்கள் தவிர, எரிபொருள் மற்றும் ஒளி விளக்குகள் 10.78 சதவீதமும், ஆடை மற்றும் காலணிகள் 9.91 சதவீதமும், வீட்டுவசதி பிரிவு 4.06 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தொழில்துறை வெளியீடு (IIP)
IIP யில் அளவிடப்படும் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி, ஜூலை மாதத்தில் 2.4 சதவீதம் அதிகரித்து 134.6 ஆக இருந்தது என்று MoSPI வெளியிட்ட தனித் தரவு காட்டுகிறது.
ஜூலை 2021 இல் IIP 11.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தரவு காட்டுகிறது.
2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜூலை) இதுவரை தொழில்துறை வளர்ச்சி 10.0 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 33.9 சதவீதமாக இருந்தது என்று தரவு காட்டுகிறது.
ஜூலை மாதத்தில் IIP வளர்ச்சியானது உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளால் ஏற்ப்பட்டது. ஜூலை மாதத்தில் உற்பத்தித் துறை 3.2 சதவீதம் உயர்ந்து 135.2 ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து மின்சாரத் துறை 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டு 188.9 ஆக இருந்தது. இருப்பினும், சுரங்கத் துறையானது (-)3.3 சதவீதம் குறைந்து 101.1 ஆக இருந்தது என்று MoSPI தரவு காட்டுகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில், உற்பத்தித் துறை 10.5 சதவீத வளர்ச்சியைக் கண்டது. அதே மாதத்தில், சுரங்கத் துறை 19.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மின்சாரத் துறை 11.1 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று தரவு காட்டுகிறது.
source https://tamil.indianexpress.com/business/india-cpi-retail-inflation-august-iip-factory-output-july-2022-nso-mospi-data-509223/