13 09 2022
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரைய கையிலெடுத்துள்ளார்.
இந்த யாத்திரை தன்னைப் புதுப்பிக்கும் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். தற்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக திகழ்கிறது எனப் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் பெரும்பாலும் காங்கிரஸ் என்ற கட்சியின் தாரக மந்திரத்தை உச்சரிக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தவிர மற்ற கட்சிகள் காங்கிரஸின் அணிக்கு வர வாய்ப்புள்ளன. ஆனாலும் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு கொள்கையை கடைப்பிடிக்கின்றன.
இது ஐந்து குடர்கள் இணைந்து ஒரு யானையை தேடுவது போன்றது. ஏனெனில் எதிர்க்கட்சி கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றன.
மறுபுறம் நரேந்திர மோடிக்கு மாற்றான முகம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் வேறு தேசிய அளவில் கட்சி தொடங்கப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தேசிய கதாபாத்திரத்தை எதிர்நோக்குகின்றனர். ஆனாலும் இவர்களின் கட்சி தேசிய அளவில் இல்லை.
அந்த வகையில் பாஜகவை எதிர்கொள்ளும் ஒரு தேசிய கட்சியாக தற்போதுவரை காங்கிரஸ் மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகள் அந்த இடத்துக்கு வர தங்களை செதுக்க வேண்டும்.
மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்பதற்கு ஒரே பதில்தான் உள்ளது. அது முகம் அல்ல, ஒற்றுமை. ஆனால் தற்போதுவரை எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அணியா அல்லது மூன்றாவது, நான்காவது அணியா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
காங்கிரஸை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திமுக, பீகாரில் ஆர்ஜேடி, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே , ஜார்க்கண்டில் ஜேஎம்எம் ஆகிய கட்சிகளுடன் நல்ல உறவை வைத்துள்ளது.
ஆனால் மற்ற கட்சிகளுடன் அந்த நல்லுறவு இல்லை. அதேநேரம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் மற்று்ம அகிலேஷ் யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்க கூட்டணியை வைத்துள்ளனர்.
இவர்கள் தங்களது மாநிலத்தில் பெருவாரியான வெற்றி பெறும்போது சில கனவுகள் சாத்தியமான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதற்கிடையில் மம்தா பானர்ஜி காங்கிரஸை இதுவரை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆகையால் மம்தா தலைமையில் மூன்றாம் அணி அமையும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மாற்றாக ஹேமந்த் சோரன் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் கூட்டணி வைத்துள்ளனர். மறுபுறம் ஆம் ஆத்மி மற்றும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிட விரும்புகின்றன.
அடுத்த வரிசையில் திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் வருகின்றன. இவர்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை விரும்புகின்றனர்.
ஆனால் மறுபக்கம் அகிலேஷ் யாதவ், காங்கிரஸூடன் கூட்டணி கிடையாது எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட சிறு கட்சிகளுன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்.
இடதுசாரிகளை பொறுத்தமட்டில் வங்கத்தில் கூட்டணிக்கு சரியென்றாலும், கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போராடுவார்கள். இதற்கிடையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைய சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
அவர்கள் 1996 மற்றும் 2004ஐ உதாரணமாக காட்டுகின்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக சந்திக்கும்போது ஒன்று விளங்குகிறது.
ஒருவர் காங்கிரஸுடன் அங்கம் வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மற்றொருவர் மாநில கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறார். மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களது மாநிலத்தில் வெற்றியை அதிகரிக்க விரும்புகிறது.
இதனை காங்கிரஸ் தலைவர்களும் உணர்ந்துள்ளனர். ஏனெனில் யாத்திரை வலுவாகும்போது எதிர்க்கட்சிகளுக்குள் ஒரு ஒற்றுமை கிடைக்கும். அதேநேரம் காங்கிரஸிற்கும் புததுயிர் கிடைக்கும் என்று நம்புகிறது.
இதனை காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் கூறுகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை (செப்.13) செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் மேலும் பலவீனம் ஆகாது” என்றார்.
யானை எழுந்துவிட்டதாகவும், அதன் பலம் சரியான நேரத்தில் தெரியும் என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/shape-of-opposition-unity-story-of-five-blind-men-who-discovered-an-elephant-509239/