6 9 2022
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாத யாத்திரையை நாளை தொடங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ’ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை கன்னியாகுமரியில் துவக்குகிறார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி தலைமை செய்து வருகிறது. அந்த வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை நாளை தொடங்குகிறார்.
வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். 20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர். 3,570 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ’இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற இந்தப் பாத யாத்திரையை வியாழன் காலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்திலிருந்து தொடங்குகிறார். இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாதயாத்திரை தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாத யாத்திரை வடக்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம்,கொச்சி,நிலம்பூர்,மைசூரு,பெல்லாரி,ராய்ச்சூர்,விக்ரபாத்,ஜல்கயோன்,இந்தூர்,ஆழ்வார்,தில்லி,அம்பாலா,பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது
150 நாட்கள் நடைபெறும் இந்த ஒற்றுமை பயண பாதயாத்திரை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துமா 2024 தேர்தலில் வெற்றிக் கணிக்கு வித்தாக இந்த நடைப்பயணம் அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
source https://news7tamil.live/rahul-gandhi-padayatra-from-tomorrow.html