5 9 2022
அலஹாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 31ம் தேதி, 17 ஓபிசி (உட்பிரிவு) சாதிகளை, எஸ்சி பட்டியலில் சேர்க்கும் இரண்டு அரசாணையை ரத்து செய்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்குத்தான் எஸ்சி பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்கும் உரிமை உள்ளது என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் உத்தரபிரதேச அரசியலில் ஒரு சலசலப்பு ஏற்படுள்ளது .
2016ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு 17 ஓபிசி ( உட்பிரிவு) சாதிகளை எஸ்சி பட்டியலில் இணைக்க அரசாணை வெளியிட்டது. இதுபோலவே யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசும் 2019ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இரு அரசுகளும், இந்த சமூகத்தினருக்கு எஸ்சி சாதி சான்றிதழை வழங்கவில்லை.
இதுபோலவே முலயாம் சிங்க யாதவ் அரசு மற்றும் மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த 17 சாதிகளை எஸ்சி பிரிவில் சேர்க்க முயற்சிகள் எடுத்தன. ஆனால் எந்த அரசுகளும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற எந்த நகர்வுகளையும் செய்யவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தை பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இதுவரை 17 சாதிகளை எஸ்சி பிரிவில் சேர்க்க 5 முறை முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்சிகள் இப்படி முயற்சி செய்வதற்கு முக்கிய அரசியல் காரணங்கள் இருக்கிறது. ஓபிசி பிரிவில் உள்ள இந்த 17 உட்பிரிவு சாதிகள்தான் மக்கள் தொகையில் 15% இருக்கிறது.
ஓபிசி சாதிகளில் உள்ள 17 உட்சாதிகள் எஸ்சி பட்டிலுக்கு சென்றுவிட்டால் ஓபிசி யாதவ் சமூகத்தினருக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். இது சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதல் பலமாக மாறும்.
யாதவ் அல்லாத ஓபிசி பிரிவினரின் வாக்குகளால்தான் 2014 தேர்தலிலும், 2019 தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்றது.
source https://tamil.indianexpress.com/india/bjp-sp-face-heat-over-hc-order-scrapping-sc-tag-for-17-groups-505318/