புதன், 16 மார்ச், 2016

500 ஆண்டுகளுக்கு பின்…வாஸ்கோடகாமாவின் கப்பல் கண்டுபிடிப்பு?

 (வீடியோ இணைப்பு)

WASGODACOMAஓமன் கடற்பகுதியில் இருந்து ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைந்த பகுதி போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவின் பாதுகாப்பு கப்பல் என கருதப்படுகிறது.
ஓமன் கடற்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைந்த பாகங்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாஸ்கோடகாமா இந்தியா செல்லும் வழியில் நொறுங்கிய எஸ்மரால்டா என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய ஆய்வாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து நடத்திய ஆய்வில், ஓமன் நாட்டின் தோபர் பகுதியில் 1503 ஆம் ஆண்டு அந்த கப்பல் மூழ்கியிருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
இந்தியா நோக்கி வாஸ்கோடகாமாவின் இரண்டாவது வருகையின் போது அவருடன் பயணமான இரண்டு கப்பல்களில் ஒன்று ஓமான் பகுதியில் மூழ்கிய எஸ்மரால்டா என கூறப்படுகிறது.
இந்த ஆய்வு தொடங்கும் முன்னர் வரலாற்று பதிவுகளும் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்களின் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே முடிவுக்கு வந்ததாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூழ்கியதாக ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக 2800 பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
இதில் எஸ்மரால்டா கப்பலில் பயன்படுத்திய மணி ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த மணி 1498 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
புதிதாக மீட்கப்பட்டுள்ள இந்த தொல்பொருள்கள் வாஸ்கோடகாமா குறித்து மேலும் பல தகவல்களை உலகிற்கு வழங்கலாம் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.
ஓமன் அரசு இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் முதன்முறையாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டது.
தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டும் அங்கிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களை பத்திரப்படுத்தியும் வருகிறது.