உலகத்தின் மிகப் பெரிய கப்பலாக கருதப்பட்ட டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறை 100,000 ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கிரண்ட் பிக் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வில் டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையின் தொடக்கம் தென்மேற்கு கீரின்லாந்தில் உள்ளது எனவும் அது ஒரு இலட்சம் ஆண்டுகள் பழமையானது எனவும் கண்டுபிடித்துள்ளார். இந்த பனிப்பாறையின் தற்போதைய எடை 75 மில்லியன் டன்னும் உயரம் 1500 அடியாகவும் உள்ளது. ஆனால் டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது அதன் எடை 1.5 மில்லியன் டன்னும் அதன் உயரம் 400 அடியும் கொண்டதாகவே இருந்தது.
அவர் மேலும் கூறியதாவது 1912ம் வருடத்தில் பல பனிப்பாறைகள் இருந்ததாகவும் அந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பலை போலவே டைட்டானிக்-2 கப்பல் உருவாகியிருப்பதாகவும் அது மிக விரைவில் கடலில் தனது பயணத்தை தொடங்கும் எனவும் ஆஸ்திரேலியாவில் உள்ள புளு ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளரும் கோடிஸ்வரருமான கிளைவ் பால்மர் என்பவர் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பலில் இருந்தது போலவே அனைத்து வசதிகளும் டைட்டானிக்-2 கப்பலில் இருப்பதாகவும் டைட்டானிக் கப்பலில் இருந்ததை விட அதிக வாழ்க்கை படகுகள் ( Life Boat) இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.