வியாழன், 10 மார்ச், 2016

விண்வெளியில் ஓராண்டாக தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்


space_imageநாசாவை சார்ந்த விண்வெளி வீரர் ஸ்கார்ட் கெல்லி மற்றும் ரஷ்யாவை சார்ந்த மிஹைல் கொரேன்கோ ஆகியோர் விண்வெளியில் ஓராண்டு தங்கி ஆராய்ச்சி செய்து இன்று  பூமிக்கு வந்தடைந்தனர். இது விண்வெளி ஆராய்ச்சியில் உலக சாதனையாக கருதப்படுகிறது. 

இவர்கள் இருவரும் செவ்வாய் கிரகத்தில் 340 நாட்கள் தங்கியிருந்தனர். இதற்கு முன் அமெரிக்க நாசா விண்வெளி மையத்தை சார்ந்த விண்வெளி வீரர்கள் யாரும் இத்தனை நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாசாவில் இருந்து விண்வெளிக்கு சென்று நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த விண்வெளி ஆராய்ச்சி செவ்வாய் கிரகம் சம்பந்தபட்ட ஆராய்ச்சிக்கும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Posts: