பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களுக்கு என்னைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, முதலமைச்சரே வேந்தராக வர வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் ஆரிப் முகமதுகான் கடிதம் எழுதி உள்ளார். அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகள் நியமனம் முடிவு ஆளுநர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்ட கடிதத்தில், விஜயன் தனது அரசியல் நோக்கங்களை ஆளுநரை சார்ந்து இல்லாமல் தொடரலாம் என்பது போல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். சிபிஐ(எம்) தலைமையிலான அரசாங்கத்துடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வேந்தர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை கீழே காணலாம்.
கண்ணூர் பல்கலைக்கழக வேந்தர் நியமனம்
கடந்த மாதம்,கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் புதிய நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகும், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்ணூர் பல்கலைக்கழக விதிமுறைப்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை துணைவேந்தராக நியமிக்கக் கூடாது. ஆனால், பேராசிரியர் ரவீந்திரன் 60 வயதை கடந்த நிலையில் மீண்டும் வேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பது விதிமுறையை மீறிய செயலாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையின் இணைப் பேராசிரியராக டாக்டர் பிரியா வர்கீஸ் சட்ட விரோதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, ரவீந்திரன் வேந்தராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். இவர் தற்போது முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலாளராக இருக்கும் சிபிஐ(எம்) மாநிலங்களவை உறுப்பினர் கே கே ராகேஷின் மனைவி ஆவார்.
இதுகுறித்து பேசிய ஆளுநர், எனது சரியான முடிவுக்கு எதிராக மீண்டும் ஒரு விஷயத்தை செய்துள்ளேன். ஆனால் இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில், எனது சொந்த அரசாங்கத்துடன் முரண்படும் போக்கை தொடர விரும்பவில்லை.
வேந்தருக்கு சம்பள பாக்கி
ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முபாரக் பாஷா பதவியேற்று ஓராண்டு ஆகியும் இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. பாஷா அக்டோபர் 2020 இல் நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் உயர்கல்வித் துறை மூன்று முறை கடிதமும், இரண்டு முறை ரிமைன்டரும் செய்தது. ஆனால், ஆளுநர் அலுவலகத்திற்கு உயர் கல்வித்துறையில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என குறிப்பிட்டார்.
சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேந்தர் தேர்வு
சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேந்தரை தீர்மானிக்க ஆளுநர் ஒரு தேர்வுக்குழுவை நியமித்துள்ளார். யுஜிசி வழிகாட்டுதல்களின்படி, வி-சி பதவிக்கு மூன்று பெயர்களைக் தேர்வுக்குழு குறிப்பிட வேண்டும்.
ஆனால், இந்தாண்டு செப்டம்பரில் வேந்தர் தேர்வு செய்யும் செயல்முறையைத் தொடங்கிய தேர்வுக் குழு, யுஜிசி வகுத்த விதிமுறைகளுக்கு எதிரான ஒரே ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைத்தது. இரண்டு மாதக்காலத்தில் எந்த பெயரையும் தேர்வு குழு குறிப்பிடாதது, அரசாங்கத்திற்கு வசதியான நபரை வேந்தராக பணியமர்த்த வழிவகுத்தது. ஆனால், அதை ஏற்காத ஆளுநர், பரிந்துரையை நிராகரித்தார்.
குறையும் வேந்தரின் அதிகாரம்
சமீபத்தில், மாநில அரசு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. புதிய திருத்தத்தின்படி,பல்கலைக்கழக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு நியமனம் செய்வதற்கான வேந்தரின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இந்த திருத்தம் மேற்கொள்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் கலந்தாலோசிக்கவில்லை.தீர்ப்பாயத்திற்கு நியமனம் செய்வதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீ நாராயணகுரு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினால் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து ஆளுநர் கூறுகையில், தற்போது தொடங்கியுள்ள ஆசிரியர் நியமனச் செயல்முறை மூன்று மாதங்கள் ஆகும் என்றும்,விவரங்களை யுஜிசி போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், 2021 ஜனவரியில் போர்டல் மூடப்பட்டு, 2021 அக்டோபரில் மட்டுமே மீண்டும் திறக்கப்படும். அந்தத் தாமதம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்பாடுகளை பாதிக்கும் என கூறுகிறார்.
ஆளுநர் vs கேரள அரசு
2020 ஆம் ஆண்டில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆரிப் முகமது கான் நிராகரித்தார்
அப்போது சட்டமன்றத்தை கூட்டியதன் நோக்கம் என்ன என்று கான் கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியபோதும், அவர் அரசாங்கத்தை கான் சாடினார். இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் முக்கியமற்றது என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/why-kerala-governor-arif-mohammed-khan-says-he-wants-to-quit-as-chancellor-382053/