வியாழன், 3 மார்ச், 2016

இஸ்லாமிய வாழ்வியலை விட்டால் வேறு வழியே இல்லை.

உலக அமைதிக்கு இஸ்லாத்தை
ஒழித்துக் கட்ட வேண்டுமாம்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“உலக அமைதிக்கு இஸ்லாத்தை அடியோடு ஒழித்துக்
கட்ட வேண்டும்” என்று பெங்களூரைச் சேர்ந்த
பாஜக எம்பி அனந்த குமார் ஹெக்டே ஆவேசப் பேச்சு.
“இஸ்லாம் இருக்கும்வரை உலகிலிருந்து தீவிரவாதத்தை
ஒழிக்க முடியாது. இந்துக்கள் தங்கள் சக்தியைக்
காட்ட வேண்டும்”
என்றும் அனந்தகுமார் எம்.பி. கொக்கரித்துள்ளார்.
பன்னாட்டு பயங்கரவாதத்துக்கு அப்புறம் போலாம் அண்ணாச்சி.
முதலில் உள்ளூர் பயங்கரவாதிகள்
யார் யார் என்று தெரிந்துகொள்வோமா?
காந்தியைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதி முஸ்லிமா?
இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதி முஸ்லிமா?
பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதி முஸ்லிமா?
சம்ஜவ்தா ரயிலில் குண்டு வைத்த பயங்கரவாதி முஸ்லிமா?
மாலேகவ்னில் குண்டு வைத்த பயங்கரவாதி முஸ்லிமா?
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்த பயங்கரவாதி முஸ்லிமா?
ராஜீவ் காந்தியைச் சிதற அடித்த பயங்கரவாதி முஸ்லிமா?
கர்கரேயைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதி முஸ்லிமா?
கல்புர்கியைக் கொன்றொழித்த பயங்கரவாதி முஸ்லிமா?
அக்லாக்கை அடித்துக் கொன்ற பயங்கரவாதி முஸ்லிமா?
இந்திய ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குருவியைச்
சுடுவது போல் சுட்டுத் தள்ளுகிறார்களே- நக்சலைட்டுகள்,
அவர்களில் எத்தனை பேர் முஸ்லிம் பயங்கரவாதிகள்?
போதுமா அண்ணாச்சி பட்டியல்?
பன்னாட்டு அளவிலும் இதே கதைதான்..!
பவுத்த பயங்கரவாதம், யூத பயங்கரவாதம், கிறித்துவ பயங்கரவாதம்,
சியோனிச பயங்கரவாதம், கம்யூனிச பயங்கரவாதம்
எல்லாமே கொடி கட்டிப் பறக்கத்தான் செய்கின்றன.
இன்னொன்றையும்தெரிந்துகொள்ளுங்கள்.
உலகில் அமைதியை நிலைநாட்ட இஸ்லாமிய
வாழ்வியலை விட்டால் வேறு வழியே இல்லை.
-சிராஜுல்ஹஸன்

Related Posts: