திங்கள், 21 மார்ச், 2016

அரிசோனா, நியூயோர்க்கில் டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


டொனால்ட் டிரம்பின் பேரணி இடம்பெற்ற பொனிக்ஸ் பகுதிக்கு அருகில் அரிசோனா நெடுஞ்சாலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்ப் நேற்று முன்தினம் பிரொன்டைன் ஹில் பகுதியில் ஆதரவாளர்கள் முன் உரையாற்றினார். எனினும் சுமார் 50 ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘டிரம்ப் குப்பை’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் வீதியை இடைமறித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் வர்த்தகரான டிரம்பின் பிரசார கூட்டங்களுக்கு அண்மைக் காலங்களில் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அவரது சிக்காகோ கூட்டம் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.
இதில் டிரம்பின் கூட்டம் நடக்கும் பிரதான பாதையையே ஆர்ப்பாட்டக்கார்கள் இடைமறித்துள்ளனர். இதன்போதும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்த பொலிஸார் சிலரை கைது செய்துள்ளனர்.
நியூயோர்க் நகரிலும் நேற்று முன்தினம் டிரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
coltkn-03-21-fr-02163026157_4075777_20032016_mss_cmyஅரிசோனாவில் நாளை ஜனாதிபதி வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.