இன்றைய நவீன உலகில் எதற்கெடுத்தாலும் சிறுவயது முதல் முதியோர் வரை தொட்டதெற்கெல்லாம் ரென்சன் ஆகின்றார்கள்.
டென்சன் ஆவதும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் தான் என ஆராய்ச்சி சொல்கின்றது.
அந்தவகையில் மன அழுத்தத்திற்கான பிரதான அறிகுறிகள் என்ன என ஆழமாக பார்க்கையில்….
மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?
உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா… நண்பர்களின் உற்சாக அரட்டை சலனப்படுத்தவில்லையா… சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத் தோன்றவில்லையா?
உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? ‘நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன், என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?’ என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?
திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?
அவ்வப்போது அழுகை வருகிறதா… யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட அழுகையை மேலும் கிளறுகிறதா… சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று தோன்றுகிறதா?
திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா… அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா… ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா… படிப்பு எல்லாம் ‘சர்’ரென கீழே இறங்குகிறதா?
‘யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை’ என தோன்றுகிறதா… ‘என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது’ என்று தோன்றுகிறதா?
தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?
மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?
– மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்.
இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவரை நாடுங்கள் – இல்லையேல் உங்களின் சூழலை உடனே மாற்றிக்கொண்டு உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள்
நிஜ வாழ்க்கையில் யாரும் யாருக்கும் உதவுவது இல்லை காரணம் எதாவது தமக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று தான்! அப்படியா பார்த்தும் பாக்காதது போல நிற்காமல் போய் விடுவார்கள்.
இன்னும் சிலர் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். இன்னும் சிலர் தங்களுடைய கையில் உள்ள மொபைல் போன் மூலம் போட்டோ எடுத்து சமுக வலை தளங்களில் வெளியிடுவார்கள்.
இங்கு ஒருவரை பார்த்து இன்னொருவர் கற்கும் விஷயம் இருக்கிறது. உதவி மனப்பான்மை! மனிதர்களின் மனதில் பதிவாகினால் எளிமையாக தவறுகளை தடுக்கலாம். இங்கு சிறுவன் முதல் பெரியோர் வரை எப்படி உதவும் மனப்பான்மை பரவுகிறது என்பதை பாருங்கள்
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا
Quran 4.36
SAHIH INTERNATIONAL
Worship Allah and associate nothing with Him, and to parents do good, and to relatives, orphans, the needy, the near neighbor, the neighbor farther away, the companion at your side, the traveler, and those whom your right hands possess. Indeed, Allah does not like those who are self-deluding and boastful.