சனி, 6 பிப்ரவரி, 2016

சீனாவில் பால் முதல் மதுவரை அனைத்திலும் கலப்படம்: பகீர் வீடியோ

மனிதன் இட்ட முட்டை, அனைத்திலும் கலப்படம்

சீனாவில் பால் முதல் மதுவரை அனைத்திலும் கலப்படம்: பகீர் வீடியோ
உலகில் மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப்பெரிய நாடாக இருக்கும் சீனா கலப்படத்திலும், போலிகளை தயாரிப்பதிலும் மிக, மிகப்பெரிய நாடாக திகழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக, உயிரினங்களில் பறவை, ஊர்வன மற்றும் மீன் இனங்கள் மட்டுமே முன்னர் முட்டையிட்டு வந்தன.இப்போதெல்லாம், சீனாவில் மனிதனே முட்டையிட தொடங்கி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வீடியோ ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள கடையில் பன்றி இறைச்சியை வாங்கி சமைத்த ஒரு குடும்பத்தலைவி, சாப்பிட்டதுபோக மீதி உணவை மேஜையின் மீது வைத்துள்ளார். அன்றிரவு, விளக்கை அணைத்துவிட்டு தூங்கப்போனபோது, அந்த சமைத்த பன்றி இறைச்சியில் இருந்து வித்தியாசமான ஒளி வெளியாக தொடங்கியது. பின்னர், அதை ஆய்வு செய்துப் பார்க்கையில் கொடிய உயிர்க்கொல்லியான ‘ஃபாஸ்ஃபோரஸென்ட்’ எனப்படும் பாக்டீரியாக்கள் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தைகளுக்கு புகட்டும் புட்டிப்பாலில் இல்லாத திடத்தன்மையை செயற்கையாக ஏற்படுத்துவதற்காக ‘மெலனோமைன்’ எனப்படும் வேதிப்பொருளை அதிகமாக கலந்து விற்றதால் கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 53 ஆயிரம் குழந்தைகள் மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர்பிழைத்தன.பர்கர்களை தயாரிப்பதற்கு ரொட்டிக்கு பதிலாக கார்ட் போர்ட்களை ஒருவித ரசாயனத்தில் ஊறவைத்து, அதை பர்கர்களின் மேல்தோடாக பயன்படுத்தி உள்ளே பன்றி இறைச்சியை திணித்து விற்று விடுகின்றனர். வெறும் பழச்சாறுகளில் ஆல்கஹால் எனப்படும் எரிச்சாராயத்தை கலந்து உயர்ந்த ரக வெளிநாட்டு மது என விற்பனை செய்யப்படுகிறது.உருளைக்கிழங்கு மசியல் மற்றும் பிளாஸ்டிக்கை கலந்து தயாரிக்கப்படும் போலி அரிசி வகைகள், ஆசியா கண்டம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, அமோக விற்பனையாகி வருகின்றது.

எலிகளை பிடித்து அடித்துக் கொன்று, தோலை உரித்து, ஒருவித ரசாயனக் கலவையில் ஊறவைத்து, பின்னர் சிறிய துண்டங்களாக வெட்டி மாட்டிறைச்சி என உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.வாதுமை கொட்டைகளின் தோடுகளை சேகரித்து, அவற்றில் காகிதம் சுற்றப்பட்ட சிமெண்ட கான்கிரீட் கற்பொடிகளை இட்டு அடைத்து, மீண்டும் இரு தோடுகளையும் ஒட்டவைத்து அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.
முட்டைகளைகூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. மெழுகால் செய்யப்பட்ட ஓடுகளில் மஞ்சள் மற்றும் வெள்ளை கருக்களை ஜெலட்டின் உள்ளிட்ட கொடிய ரசாயனக் கலவையை கொண்டு உருவாக்கி, சந்தைப்படுத்துகின்றனர்.கெட்டுப்போன தானியங்களால் தயாரிக்கப்படும் சீன மக்களின் அன்றாட உணவான நூடுல்ஸ் வகைகள் இன்றும் வெற்றிகரமாக விறபனையாகி வருகின்றன.இந்நிலையில், ஊட்டச்சத்து நிறைந்ததும், பாதுகாப்பானதுமான இந்திய வகை உணவுகளை குறைகூறும் நம்மில் பலர், இன்றும்கூட சீன உணவகங்களில் சாப்பிடுவதற்காக அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கையாக முட்டை தயாரிக்கப்படும் வீடியோ