செவ்வாய், 1 மார்ச், 2016

பட்ஜெட் விளைவுகள்: மொபைல், சுற்றுலா, ஹோட்டல் கட்டணம் உயர்கிறது

இன்று அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்படவில்லை. இது வரி செலுத்துவோருக்கு பெரிய ஆறுதலை அளித்துள்ளது. ஆனால், செஸ் வரி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிரிஷி கல்யாண் என்று அழைக்கப்படும் செஸ் வரியுடன் சேர்த்து மொத்த சேவை வரியானது 14.5 சதவீதமாக இருந்தது. தற்போது செஸ் வரி 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், மொத்த சேவை வரி 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வரி உயர்வு காரணமாக தொலைபேசி அழைப்பு கட்டணம், உணவகங்கள், ரியல் எஸ்டேட், காப்பீடு, விளம்பரம், விமான பயணம், கட்டட நிர்மாணங்கள், கடன் அட்டைகள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை போன்ற சேவை துறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விலையேற்றமானது ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.