ஞாயிறு, 13 மார்ச், 2016

NOTA -NONE OF THE ABOVE

NOTA -NONE OF THE ABOVE (நோட்டா பட்டம் அனைத்து வாக்கு மிஷின்களிலும் கீழே கடைசியில் இருப்பதால்,மேலே உள்ள அனைத்திற்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை )
அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, இப்பொத்தான் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக்கடைசியில் கீழே அமைந்திருக்கும்.
முதல் முதலில் இந்த சட்டத்தை நடைமுறை படுத்தப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் தான் பயன்படுத்தப்பட்டது.
இந்த நோட்டா பட்டன் அமுக்கினால்,36 % அல்லது அதற்கு மேல் ஓட்டுக்கள் நோட்டா வுக்கு பதிவானதால்,அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கே வர முடியாது என்று சில குமுட்டைகள் பேஸ் புத்தகத்தை கலக்கி கொண்டு இருக்குதுங்க.
அதை எல்லாம் நம்பி இந்த தலைமுறை அரசியல் வாதிகளுக்கு எதிராக ஓட்டு போடுரேன் நு நோட்டா வுக்கு போடாதிங்க.
T S ARUNKUMAR VILLUPURAM.
அந்த தொகுதியில் போட்டுயிட்ட வேட்பாளர்களை விட NOTA வுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருந்தால்,
சில வழிமுறைகள் பின்பற்றப்படும்.
அதாவது ,
நாமினேஷன் /தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மறுபடியும் மனு வை அளிக்க ,RENOMINATION நடத்தப்படும்.
மறுபடியும் நாமினேஷன் நடக்கும்போது, யார் வேண்டுமானாலும் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம்.
T S ARUNKUMAR VILLUPURAM.
நோட்டா ஓட்டு அதிமாக இருந்தால்,மற்ற வேட்பாளர்களில் யார் அதிக ஓட்டு வாங்கி இருக்கிறார்கலோ அவர்களை வெற்றி பெற்றார்கள் என்று அறிவிக்கப்படும்.
அதனால்,நல்ல வேட்பாளர் யார் என்று தெரிந்து ஓட்டு போடுங்கள்.

Related Posts: