சனி, 21 மார்ச், 2020

ம.பி. முதல்வர் கமல்நாத் ராஜினாமா - மக்களின் வெற்றி : ஜோதிர் ஆதித்ய சிந்தியா கமல் நாத் ராஜினாமா செய்ததையடுத்து, சட்டசபை, காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னரே, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.

ம.பி. முதல்வர் கமல்நாத் ராஜினாமா - மக்களின் வெற்றி : ஜோதிர் ஆதித்ய சிந்தியா

கமல் நாத் ராஜினாமா செய்ததையடுத்து, சட்டசபை, காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னரே, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொது செயலாளருமான ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.,வில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 22 பேர் கடந்த வாரம் பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அதற்கான கடிதத்தை கவர்னர் லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர் பிரஜாபதிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 அமைச்சர்களும் அடங்குவார்கள். அவர்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டார்.

இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்தது. சட்டசபையில் காங்கிரசுக்கு 113 எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,விற்கு 107 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர் 22 பேர் ராஜினாமாவால் காங்கிரஸ் பலம் 91 ஆக குறைந்தது. இதனையடுத்து சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து பா.ஜ.,வின் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட 9 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் இன்று(மார்ச் 20) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி உத்தரவிட்டது.
கமல் நாத் ராஜினாமா : இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே, முதல்வர் பதவியை, கமல்நாத் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளார்.

மக்களின் வெற்றி – சிந்தியா
கமல் நாத் ராஜினாமா செய்த விவகாரம், மத்திய பிரதேச மக்களின் வெற்றி என்று காங்கிரசில் இருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேர்மை இன்று வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு : கமல் நாத் ராஜினாமா செய்ததையடுத்து, சட்டசபை, காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
credit indianexpress.com