சனி, 21 மார்ச், 2020

வரும் 22ஆம் தேதி கடைகள் அனைத்தையும் அடைக்க வேண்டும் - வெள்ளையன்

வரும் 22ஆம் தேதி கடைகள் அனைத்தையும் அடைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை தமிழகத்துடன் இணைக்கும் சாலைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், வணிக வளாகங்கள், உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
தமிழகத்துடன் மற்ற மாநில இணைப்பு எல்லைகளை மூடியும், அத்திவாசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருத்துவ பொருட்கள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்கள், அதாவது இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லைகளில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன், தமிழக அரசின் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வணிகர் சங்கம் பாராட்டுவதாகக் கூறினார். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கார்டுகள் மூலம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
credit ns7.tv