வியாழன், 10 மார்ச், 2016

பின்பாஸை விமர்சிக்க தயாரா?



சவூதி அறிஞரான இமாம் பின்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய்யின் வகையில் உள்ளது தான் என தெளிவாக கூறுகிறார்.
எங்கெல்லாம் பொய் சொல்ல அனுமதிக்கப்பட்டது என்று தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் புகாரியில் இடம்பெற்றுள்ள நபிகள் நாயகம் போருக்கு செல்லும் போது வேறெங்கோ செல்வதை போன்று பாசாங்கு செய்து மறைப்பார்கள் எனும் செய்தியை குறிப்பிட்டு விட்டு
இந்த பொய்யில் எந்த மோசடியும் ஏமாற்று வேலையும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் நலனே நாடப்படுகிறது. எனவே போரில் இத்தகைய பொய்யினால் எந்த பிரச்சனையும் இல்லை.
என்று விளக்கம் அளிக்கிறார்.
இதிலிருந்து நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய் தான் என்று உறுதிப்படுத்துகிறார்.
இதோ அவர் அளித்துள்ள ஃபத்வாவின் வாசகங்கள் மற்றும் அதன் லிங்க்
وقد ثبت عن الرسول - صلى الله عليه وسلم - أنه كان إذا أراد غزوة ورى بغيرها. فالمقصود أن الكذب الذي ليس فيه غدر ولا خداع ، ولكن فيه مصلحة للمسلمين لا بأس به في الحرب.
http://www.binbaz.org.sa/noor/835
இப்போது ஸலபுக்கும்பல் என்ன சொல்லப் போகிறார்கள்?
இமாம் பின்பாஸ் நபிகள் நாயகம் போரில் பொய் சொன்னார்கள் என்று கூறி நபியின் கண்ணியத்தை அவமதித்து விட்டார் என்று சலபுக்கும்பல் கொதித்தெழுவார்களா? ஆர்ப்பரிப்பார்களா?
அறிஞர் பி.ஜே இந்த கருத்தை சொன்னதற்காக ஆளாளுக்கு இதர வேலையை விட்டு விட்டு இதையே முழு வேலையாக எண்ணி, அக்னிக்குழம்பாக வெடித்துச் சிதறி, பல மணி நேரம் பேசி வீடியோ வெளியிட்ட இந்த ஸலபுக் கும்பல் பின்பாஸூக்கு எதிராக
பொங்கி எழுவார்களா? வெடித்துச் சிதறுவார்களா? வீடியோ வெளியிடுவார்களா? அல்லதுபுஸ்வாணமாகி போவார்களா?
ஏனிந்த இரட்டை நிலை? ஏனிந்த இரட்டை நாக்கு?
நபிகள் நாயகம் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று பி.ஜே சொன்னால் நபி மீது வைத்திருந்த (போலி) பாசம் கட்டுப்பாடற்று பொங்கி எழுந்து ஏதோதோ பேசுகிறார்கள்.
அதையே பின்பாஸ் சொல்லியுள்ளார் என்றால் அது தவறு தான் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்திலும் இதையே தான் செய்தார்கள்.
ஆயிஷா ரலி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற காரணத்தை சொல்லி சில ஹதீஸ்களை மறுத்தால் அது தவறு. அதையே தவ்ஹீத் ஜமாஅத் செய்தால் அது வழிகேடு, ஹதீஸ் மறுப்பு, குஃப்ரிய்யத் என்ற ஃபத்வா.
இது தான் உங்களது நடுநிலையா? உங்களது விமர்சனத்தில் நியாயம் உள்ளதா?
இதிலிருந்து நீங்கள் பேசியதற்கு காரணம் மார்க்கப்பற்றோ, சரியானதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற மார்க்க உணர்வோ காரணமல்ல மாறாக பி.ஜே மீது கொண்ட காழ்ப்புணர்வே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

Related Posts: