புதன், 21 செப்டம்பர், 2016

பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: மோசமான இந்திய மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி


பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள இந்திய மாநிலங்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் சிஎஸ்ஐஎஸ் அமைப்பும், இந்தியாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து நடத்தின.
இதில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் முதலிடம் பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலத்துக்கு அதிகபட்சமாக 40 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கான மிகமோசமான பணிச்சூழல் பாதுகாப்பு உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லியை உள்ளடக்கிய டெல்லி மாநிலம் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லிக்கு 8.5 புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பெண்கள் பணிபுரியும் நேரம் குறித்த கட்டுப்பாடுகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் மீது மாநில நீதித்துறை மற்றும் குற்றவியல் துறைகளின் நடவடிக்கைகள், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மாநிலத்தில் உள்ள பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக முறையே தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, ஹிமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 21.1 புள்ளிகளுடன் தமிழகத்துக்கு 9ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
source; new gen media