ஏலியன்கள் மற்றும் ஜாம்பிக்கள் எனப்படும் வேற்றுக்கிரவாசிகளின் தாக்குதலைச் சமாளிக்கும்வகையில் நாடு தயாராக இருக்கிறதா என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மும்பைவாசி ஒருவர் எழுப்பியுள்ள கேள்வியில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் உதவியின்றி வேற்றுக்கிரக வாசிகளின் தாக்குதலை இந்தியாவால் சமாளிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியின் நகலை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர், இதுபோன்ற கேள்விகள் அதிகாரிகளின் விலைமதிப்பற்ற நேரத்தை வீண்டிக்கும் செயல் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
September 21, 2016 - 02:43 PM