புதன், 7 செப்டம்பர், 2016

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலில் பிழை !



காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் , தீர்ப்பின் நகலில் தவறுதலாக 15 கன அடி நீர் திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. தமிழக அரசின் முறையீட்டை அடுத்து உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு , புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை பார்த்த பின்பே தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் புதிய உத்தரவு கர்நாடக அரசுக்கு கிடைத்த பின்பே காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
Source: News18,Tamil