*அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்*
.
.
நீதி மறுக்கப்பட்டும்,நீதிக்கு புறம்பாக தண்டிக்கப்பட்டும் 19 ஆண்டுகளாக 49 முஸ்லிம்கள் ,
மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆயுள் சிறைவாசிகள்,
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு வதைபட்டுக்கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
தன்னலத்திற்காக இன்றி சமுதாயத்தின் பெயரால் சிறைபட்டு, தங்களின் இளமைக்காலம் முழுவதும் சிறைக்கொட்டடியில் கழித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, முதுமையடைந்துவிட்ட இவர்களை விடுதலை செய்ய கோரி கீழ்காணும் வாசகத்தை மின் அஞ்சல் வழியாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.
*வாசகம்*
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, நலம் வாழ வாழ்த்துக்கள். அயல் நாட்டு சிறைகளிலும், பிற மாநில சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பெரு முயற்சிகளை மேற்கொள்ளும் தாங்கள், தங்களின் ஆளுகையில் உள்ள தமிழக சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
*மின் அஞ்சல் முகவரி* cmcell@tn.gov.in
*மின் அஞ்சல் முகவரி* cmcell@tn.gov.in