தமிழக வளர்ச்சிக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து பேசினார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, அவருக்கு பொருளாதார ஆலோசனை அளிப்பதற்காக பொருளாதார ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜான் ட்ரீஸ், எஸ் நாராயண் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னள் ஆளுநர் ரகுராம் ராஜனும் உறுப்பினராக உள்ளார். இந்த குழுவின் பணி தமிழக அரசு வளர்ச்சி இலங்குகளை எட்டுவதற்கான ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், கொரோனா பரவல் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், ரகுராம் ராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போடு, தமிழக அரசு பொருளாதார வளர்ச்சி இலங்குகளை எட்டுவதற்கு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/former-reserve-bank-governor-raghuram-rajan-meets-cm-mk-stalin-what-they-discussed-382613/