புதன், 12 ஏப்ரல், 2017

12-ம் வகுப்பு CBSE பாடப் புத்தகத்தில் புதிய சர்ச்சை! April 12, 2017

12-ம் வகுப்பு CBSE பாடப் புத்தகத்தில் புதிய சர்ச்சை!


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பெண்களின் அங்க அளவு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆரோக்கியமான பெண்களின் அங்க அளவு 36-24-36 ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  சர்வதேச அழகிப் போட்டிகளில் பெண்களின் உடல் அளவிற்கு இதுவே அளவு கோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இந்த அளவு அமைப்பு கொண்ட பெண்களே அழகானவர்கள் என்றும், ஒல்லியான பெண்களே அழகானவர்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இது போன்று பெண்களின் அங்க அளவுகளை குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு ஆங்கில எழுத்தான வி வடிவத்தில் உடலமைப்பு இருப்பதும் சிறந்ததாக கருதப்படுகிறது என்றும் சிபிஎஸ்இ புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: